கெமிக்கல் விநாயகர் சிலைகளை தவிர்ப்போம்: ராம கோபாலன்
வேலூர்:
கெமிக்கல் பொருட்களால் விநாயகர் சிலைகளைத் தயாரிப்பதை எதிர்காலத்தில் தவிர்ப்போம் என்றுஇந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
வேலூரில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தைத் தொடங்கி வைக்க வந்த அவர் பின்னர்செய்தியாளர்களிடம் கூறுகையில், மண்ணால் விநாயர் சிலைகளை செய்தால் குறிப்பிட்டஉயரத்தில்தான் சிலைகளை செய்ய முடியும். அதிக உயரத்தில் செய்ய முடியாது.
எனவேதான் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பொருட்களில் செய்கிறோம். இந்த வகைசிலைகளை கடலில் கரைக்கக் கூடாது என்று ஒரு வக்கீல் வழக்குப் போட்டுள்ளார். ஆனால் இதைஅவர் முன்பே எங்களை அணுகி கூறியிருந்தால் அதற்கேற்ப நாங்களும் சிலைகள் தயாரிப்பதைமாற்றிக் கொண்டிருப்போம்.
தற்போது சிலைகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டதால் அதை மாற்ற முடியாது. இருப்பினும்வரும் ஆண்டிலிருந்து கெமிக்கல் பொருட்களைக் கலக்காமல் விநாயகர் சிலைகளை செய்யமுயற்சிப்போம்.
இருப்பினும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சென்னை கடலில் கூவம் சாக்கடையேபெரியஅளவில் கலக்கிறது. இதனால் கெடாத சுற்றுச்சூழல், மீன் வளமா, விநாயகர் சிலைகளைகரைக்கும்போது கெட்டு விடப் போகிறது?
நாங்கள் அதிமுகவை ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு ஜால்ரா போடவும் இல்லை. இந்துக்களுக்குஆதரவாக நடக்கும் யாரையும் நாங்கள் ஆதரிப்போம். கருணாநிதி இந்துக்களுக்கும், இந்துமதத்திற்கும் விரோதமாக நடப்பதால் அவரை எதிர்க்கிறோம், அவரைத் தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளோம். மற்றபடி அவருக்கும், எனக்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமும் கிடையாதுஎன்றார் அவர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications