பாண்டி.யில் அதிகரிக்கும் கேபரே, சூதாட்டம்: அதிமுக
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில், ஹோட்டல்களிலும் விடுதிகளிலும் கேபரே நடனம் மற்றும் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டும் என்று அம்மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள்நடத்தும் ஹோட்டல்கள், தனியார் விடுதிகள், பங்களாக்களில் கேபரே நடனமும், சூதாட்டமும் அதிகஅளவில் நடந்து வருகின்றன. இவற்றை போலீஸார் கண்டு கொள்வதில்லை.
நாட்டின் கலாச்சராத்திற்கே கேடு விளைவிக்கும், பெண்களை இழிவுபடுத்தும் இவற்றிற்கு அரசுதடை விதிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிமுக தொண்டர்களும், மகளிர்அணியினரும் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள், விடுதிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தவேண்டியதிருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications