ராமதாஸ் மீதான வழக்கு: விசாரணை அக்.8 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதுதொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டம் மயிலாடுதுறையில், கடந்த 1993ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி நடந்த கூட்டத்தில்ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில் வேதாகமப் பள்ளி ஆரம்பித்தால், அதை குண்டு வீசித் தகர்ப்பேன் என்றார்.இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை அக்டோபர் 8ம்தேதிக்கு ஒத்திவைப்பதாக குற்றவியல் நீதிபதி ராஜ்குமார் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications