சிறையில் கைதி மர்மச் சாவு: மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, புழல் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்ததுதொடர்பாக மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்துமாறும், இதுதொடர்பாக முழு விசாரணை நடத்துமாறும் மாநிலமனித உரிமை ஆணைய நீதிபதி தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கோவில் பூசாரி உள்ளிட்ட 2 பேர் படுகொலைசெய்யப்பட்டனர். இதுதொடர்பாக ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கைதானதுகுறித்து அவரது மனைவிக்கு போலீஸார் தகவல் தெரிவிக்கவில்லை.

இதனால் தவித்துப் போன ராமலிங்கத்தின் மனைவி காவல்துறை உயர் அதிகாகளுக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து கடந்த 12ம் தேதி ராமலிங்கத்தின் மனைவிக்கு ஒரு தந்தி வந்தது. அதில் ராமலிங்கம் கைதுசெய்யப்பட்டு புழல் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே நாளில் மேலும் 3 தந்திகள் வந்தன. இரண்டாவது தந்தியில், ராமலிங்கம் உடல் நிலை பாதிக்கப்பட்டுஇருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 3வது தந்தியில் ராமலிங்கத்தின் உடல் நிலை மிகவும் மோசமாகஇருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

4-வதாக வந்த தந்தியில் ராமலிங்கம் இறந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

ஒரே நாளில் அடுத்து நான்கு தந்திகள் வந்ததும், அவை அனுப்பப்பட்ட முறையும் தனக்கு பெரும் சந்தேகத்தைஏற்படுத்தியுள்ளதாகவும், தனது கணவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார் என சந்தேகப்படுவதாகவும் கூறி அவரதுமனைவி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ், ராமலிங்கத்தின் உடலை ஒன்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் அடங்கிய குழுமீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

பரிசோதனையை வீடியோவிலும் பதிவு செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்பொன்னுச்சாமி தலைமையில் மீண்டும் முழு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+