வன்முறையை புலிகள் கைவிட வேண்டும்: அமெரிக்கா
கொழும்பு:
வன்முறையை புலிகள் கைவிட வேண்டும் என அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பேச்சுவார்த்தைகள்ஆரம்பித்தன. ஆனால், கடந்த ஏப்ரலில் 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்திருந்த நிலையில் பேச்சுக்களில் இருந்துபுலிகள் விலகிக் கொண்டனர்.
பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட எந்த விஷயத்தையும் பிரதமர் ரணிலின் அரசு நிறைவேற்றவில்லைஎன்பதைக் காரணம் காட்டியும், வட- கிழக்கு இலங்கையில் தங்கள் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தைஅமைக்க வேண்டும் என்று கோரியும் பேச்சுவார்த்தையில் இருந்து புலிகள் விலகினர்.
அதே நேரத்தில் மீண்டும் போரைத் தொடங்க மாட்டோம் எனவும் அறிவித்தனர்.
இந்த (தடைபட்ட) பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்ததன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி கொழும்பில் உள்ளஅமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில் பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருப்பது துரதிஷ்டவசமானது. இலங்கைஅரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ள புலிகள் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றக் கூடியவை தானா என்பதையோசித்துப் பார்க்க வேண்டும்.
அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவது, வன்முறை போன்றவற்றைக் கைவிட்டு புலிகள் மீண்டும்பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். அமைதி ஒப்பந்தத்தில் தந்துள்ள உறுதிமொழிகளை புலிகள் நிறைவேற்றவேண்டும்.
இடைக்கால நிர்வாகம் தொடர்பான திட்ட வரையரையை கடந்த ஜூலை 14ம் தேதி இலங்கை அரசு புலிகளிடம்கொடுத்தது. அந்த வரையரைகளில் அல்லாத, நிறைவேற்ற சாத்தியப்படக் கூடிய கோரிக்கைகளை மட்டும் புலிகள்வலியுறுத்த வேண்டும். மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் துவக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நார்வே அமைதிக் குழுவைச்சேர்ந்த அந் நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன், சிறப்புத் தூதர் எரிக் சோல்ஹைம்ஆகியோர் இன்று கொழும்பு வந்து சேர்ந்தனர்.
இதற்கிடையே மீண்டும் போருக்கு புலிகள் தயாராகி வருவதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம்சாட்டியுள்ளார். அவரது மக்கள் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் சரத் அமுகமா நிருபர்களிடம் கூறுகையில்,
கிழக்கு இலங்கையில் புலிகள் தங்களது படைகளைத் தயார் செய்து வருகின்றனர். இதை அதிபர் பார்த்துக் கொண்டுஅமைதியாக இருக்க மாட்டார். சரியான நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுப்பார் என்றார்.
ரணில் அரசும் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே அந்தப் பேச்சுக்களை குறை கூறி வந்தார்சந்திரிகா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications