சத்துணவில் விஷம் கலந்த தலைமை ஆசிரியர்- மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த சத்துணவில் விஷம் கலக்க கூறிய தலைமை ஆசிரியரையும்,அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாணவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் உள்ள இனாம்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ஸ்டீபன் குமார்.

இந்தப் பள்ளிக்கு பன்னப்பட்டி நடுநிலைப் பள்ளியிலிருந்து சத்துணவு வருவது வழக்கம்.

இந் நிலையில் நேற்று முன் தினம் உணவு பரிமாறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அந்தசத்துணவில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உணவில் அரளி விதைகள் அரைத்துக்கலக்கப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். இது தொடர்பாகபோலீசார் விசாரனை நடத்தி அதே பள்ளியில் 8ம் வகுப்புப் படிக்கும் மலைச்சாமி என்றமாணவழைக் கைது செய்தனர்.

அவனது பையில் இருந்த அரளி விதைகளும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தலைமை ஆசிரியர் ஸ்டீபன்தான்தன்னிடம் ரூ. 100 கொடுத்து, சத்துணவில் விஷம் கலக்குமாறு கூறியதாகத் தெரிவித்தான். சத்துணவுதவிர பள்ளியின் குடி நீர்த் தொட்டியிலும் அரளி விதைகளை அரைத்துத் தூவச் சொன்னதாகவும்,இதைச் செய்யாவிட்டால் தன்னைக் கொன்று விடுவதாக மிரட்டினார் என்றும் கூறினான்.

மேலும் தொடர்ந்து நான்கு நாட்களாக சத்துணவில் அரளி விதைகளைக் கலந்ததாகவும், இருதினங்களுக்கு முன் அதிக அளவில் கலந்ததாகவும் அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் ஸ்டீபன், மாணவன் மலைச்சாமி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மலைச்சாமி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

தலைமை ஆசிரியர் ஸ்டீபன் குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. எதற்காக உணவில் விஷம்கலந்து மாணவர்களை இவர் கொல்ல முயன்றார் என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+