கிளிநொச்சியில் நார்வே தூதர்கள்- தமிழ்செல்வன் பேச்சு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்குவது தொடர்பாக புலிகளுடன் ஆலோசனை நடத்த நார்வேதுணை வெளியுறவுத்துறைச் செயலாளர் விடார் ஹெல்ஜெசன் இன்று கிளிநொச்சிக்குச் சென்றார்.
அவருடன் நார்வே சிறப்பு அமைதித் தூதரான எரிக் சோல்ஹைமும் உடன் சென்றார். கடந்த ஏப்ரல் முதல்தடைபட்டுவிட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்குவது குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுடன் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.நேற்றும் தமிழ்ச்செல்வனுடன் அமைதிக் கண்காணிப்புக் குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.இக் குழுவின் தலைவர் டெபல்சன் நேற்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்தார். அப்போது, அமைதி ஒப்பந்தத்தை மீறிபுலிகள் அமைத்துள்ள முகாமை உடனடியாகக் கலைப்பது குறித்து பேசப்பட்டது.இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், தொடர்ந்து பேச்சு நடத்துவது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.இந் நிலையில் தான் நார்வே தூதர்கள் புலிகளுடன் இன்று பேச்சு நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications