நகர்ப் புறங்களில் மரங்களை வெட்டத் தடை: சட்டம் கொண்டு வருகிறது தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நகர்ப் புறங்களில் உரிய அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டினால் சிறை தண்டனை வழங்கும் வகையில்தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதற்காக மரங்கள் பாதுகாப்பு ஆணையம் என்ற அமைப்பையும் அரசு உருவாக்க உள்ளது.

முதல்கட்டமாக இந்தச் சட்டம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநாகராட்சிகளுக்குஉட்பட்ட பகுதிகளில் அமலாக்கப்படும் என்று தெரிகிறது. பின்னர் பிற நகர்ப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும்இந்தச் சட்டம் அமலாக்கப்படும்.

மரங்கள் பாதுகாப்பு ஆணையத்தில் மாநகராட்சி மேயர்கள், மாவட்ட வனத்துறை அதிகாரிகள், வன விலங்குகள்பாதுகாப்பு வார்டன்கள், போலீஸ் கமிஷ்னர்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், கவுன்சிலர் ஆகியோர்உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்தச் சட்டத்தை அமாலக்குவதற்கு முன்பாக 6 முக்கிய நகரப் பகுதிகளிலும் பொது இடங்கள், வீடுகள், தனியார்இடங்களில் உள்ள மரங்களைக் கணக்கெடுத்து அரசிடம் ஒப்படைக்குமாறு புள்ளிவிவரத்துறைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்படி அனுமதியில்லாமல் மரம் வெட்டினால் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றுதெரிகிறது. இது தவிர மரத்தின் மதிப்பில் 25 சதவீதத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்படும்என்று கூறப்படுகிறது.

வீடுகள் கட்ட, வீட்டை விரிவாக்கவோ, வர்த்தக கட்டடங்கள் கட்டவோ விரும்புவோர் தங்கள் இடத்தில் உள்ளமரத்தை வெட்ட மரப் பாதுகாப்புக் கமிட்டியிடம் விண்ணபிக்க வேண்டும். இந்தக் கமிட்டி ஆராய்ந்து அனுமதிஅளித்த பின்னரே மரத்தை வெட்டலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+