மெரீனாவில் பொதுக் கூட்டம், மதக் கூட்டம் நடத்த கூடாது: கமிஷனர்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் பொதுக் கூட்டங்கள், மத சார்பான கூட்டங்களோ நடத்தக் கூடாது என சென்னைமாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் கூறினார். இந்தத் தடையை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், மெரீனா கடற்கரையில் அரசியல் கட்சிகளின் கூட்டமோ,மத சார்பான கூட்டமோ நடத்தக் கூடாது என அரசு தடை விதித்துள்ளதால், அரசு அனுமதிக்கும் வரை நாங்களும்அதை அனுமதிக்க மாட்டோம்.
சென்னையில் பொதுக் கூட்டங்கள் நடத்த விரைவில் மாற்று இடம் ஒதுக்கப்படும். இதற்காக தீவுத்திடல் உள்ளிட்டசில பகுதிகளை ஒதுக்கலாமா என்று பரிசீலித்து வருகிறோம் என்றார்.
இளங்கோவன் எதிர்ப்பு:
மெரீனாவில் பொதுக் கூட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகதமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் சார்பில் நடந்த முப்பெரும் விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை முதலில் இடித்தனர். பின்னர் மேலும் சில கட்டடங்களை இடித்தனர்.இப்போது அங்கு பொதுக் கூட்டமே நடத்தக் கூடாது என்று தடை விதிக்கின்றனர். இதை எதிர்த்து போராட்டம்நடத்துவோம்.
மத்திய அரசை எதிர்த்து 30ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்துகிறோம். மதுரையில் நடக்கும்போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன் என்றார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications