பாப்பாபட்டியில் திட்டமிட்டபடி தேர்தல்: ஆனால், வெல்பவர் பதவி விலகுவார்!
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு திட்டமிட்டபடி அக்டோபர் 9ம் தேதிவாக்குப் பதிவு நடக்கவுள்ளது.
பாப்பாபட்டி உள்ளிட்ட 4 தலித் பஞ்சாயத்துக்களுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறதிட்டமிடப்பட்டிருந்தது. இதில் கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டியில் மட்டுமே வேட்பாளர்கள் மனுத் தாக்கல்செய்திருந்தனர். நாட்டார்மடங்கலம், கொட்டாச்சியேந்தல் ஆகிய மற்ற இரண்டு பஞ்சாயத்திலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந் நிலையில் கீரிப்பட்டியில் மனுத் தாக்கல் செய்திருந்த 2 பேரும் மனுக்களை வாபஸ் பெற்று விட்டனர்.
பாப்பாபட்டியில் மொத்தம் 3 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் டம்மி வேட்பாளரானமுனியாண்டி நேற்று தனது மனுவை வாபஸ் பெற்றார்.
இதனால் தற்போது ஊர் மக்களால் நிறுத்தப்பட்டுள்ள அழகரும், முத்தன் என்பவரும் மட்டுமே களத்தில் உள்ளனர்.
இவர்களில், முத்தனை வாபஸ் பெறுமாறு ஊர் மக்கள் வலியுறுத்தியும் அவர் வாபஸ் பெற மறுத்து விட்டதால்அக்டோபர் 9ம் தேதி திட்டமிட்டபடி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதில் பாப்பாபட்டியைச் சேர்ந்த தேவர் சமூத்தைச் சேர்ந்தவர்கள் அழகருக்கு வாக்களிக்கவுள்ளதாகவும், ஆனால்,தேர்தல் முடிந்த பின், முந்தைய ஆண்டுகளைப் போலவே அழகர் தனது பதவியை ராஜினாமா செய்து விடவேண்டும் எனவும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தலித்தை தலைவராக ஏற்க தேவர் சமூகத்தினர் மறுத்து வருகின்றனர். இதனால்இங்கு தலித்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவே முடியாத நிலை உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications