உடலை அடக்கம் செய்ய விடாமல் மயானத்தை மூடிய ஜமாத்: பெரம்பலூரில் பரபரப்பு
பெரம்பலூர்:
தனது தாயாரின் பிரேதத்தை அடக்கம் செய்ய மயானம் திறக்கப்படவில்லை என்று கூறி பெரம்பலூர் முஸ்லீம்ஜமாத் மீது ஒரு டாக்டர் போலீஸில் புகார் கொடுத்தார்.
அப்படி இருந்தும் ஜமாத்திடம் டாக்டர் மன்னிப்பு கேட்ட பிறகே மயானத்தில் அவரது தாயாரை அடக்கம் செய்யஅனுமதி கிடைத்தது.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் ஜபருல்லா கான். இவரது தாயார் பாத்திமா பீவி, திருச்சியில்மரணமடைந்தார். இதையடுத்து சொந்த ஊரான பெரம்பலூருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
தனது தாயான் உடலை அடக்கம் செய்ய மயானத்தை திறக்குமாறு அங்குள்ள முஸ்லீம் ஜமாத்திடம் கோரிக்கைவிடுத்தார் கான். ஆனால், மயானத்தை திறந்து விட ஜமாத் மறுத்து விட்டது. காரணம், ஏற்கனவே ஜமாத் சார்பில்நடத்தப்பட்டு வரும் ஒரு ஆதரவற்றோர் பள்ளி நிர்வாகம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் கான்.
இதனால் அவர் மன்னிப்பு கேட்டால்தான் மயானம் திறக்கப்படும் என்று கூறி விட்டனர்.
இதையடுத்து பெரம்பலூர் போலீஸில் புகார் கொடுத்தார் கான். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
உடலை அடக்கம் செய்வதில் தொடர்ந்து பிரச்சினை நிலவவே, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கானின் தம்பிமுபாரக் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறுமாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.
போலீஸார் ஜமாத்திற்கு விரைந்தனர். ஆனால், டாக்டர் மன்னிப்பு கேட்டால்தான் மயானக் கதவு திறக்கப்படும்என்று ஜமாத் நிர்வாகிகள் உறுதியாக நன்றனர். இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் ஜமாத் நிர்வாகிகளிடம்வழக்கு தொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் டாக்டர் ஜபருல்லா கான்.
இதையடுத்து இரவு 10 மணியளவில் ஜமாத் மயானம், உடல் அடக்கத்திற்காக திறந்து விடப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications