போலீஸ்காரரின் காட்டுத்தனம்: கர்ப்பிணியை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவருக்கு அடி- உதை
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குள்நுழைந்ததற்காக ஆட்டோ டிரைவரை போலீஸ்காரர் அடித்து உதைத்தார்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ளஅரசினர் மருத்துவமனைக்கு பெரம்பூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக் கொண்டுஅசோக் குமார் என்ற ஆட்டோ டிரைவர் வந்தார்.
கர்ப்பிணி வலியால் துடித்ததால் நேராக மகப்பேறு பிரிவுக்கு ஆட்டோவை கொண்டு செல்ல முயன்றார். அப்போதுஆட்டோவை வாசலில் தடுத்து நிறுத்தினார் ஒரு போலீஸ்காரர். ஆட்டோ எல்லாம் உள்ளே போகக் கூடாது என்றுதடுத்தார்.
கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமைய நேரில் பார்த்த பின்னரும் ஆட்டோவை உள்ளே விட போலீஸ்காரர்மறுத்தார். கர்ப்பிணியை நடக்கச் சொல்கிறீர்களே, இது நியாயமா என்று ஆட்டோ டிரைவரும் பெண்ணுடன்வந்தவர்களும் கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், என்னை எதிர்த்தா பேசுகிறாய் என்று கேட்டுக் கொண்டே சரமாரியாகஆட்டோ டிரைவரைத் தாக்கினார். கீழே இழுத்துப் போட்டும் மித்திதார். இதில் அசோக் குமாரின் மூக்கு உடைந்துரத்தம் வெளியேறியது. காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஆவேசமடைந்து அந்த போலீஸ்காரரை கெரோ செய்தனர். இதையடுத்துஅவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து கொண்டார்.
கடும் கோபத்தில் இருந்த பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொது மக்களைசமாதானப்படுத்தினர். காயமடைந்த ஆட்டோ டிரைவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்ட அந்த காட்டான் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications