திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் கைதாகி ஜாமீனில் விடுதலை- மீண்டும் கைது செய்ய முயற்சி
விழுப்புரம்:
திமுக தீர்மானக் குழு உறுப்பினரும், தலைமைக் கழக பேச்சாளருமான வெற்றி கொண்டான் தமிழக போலீசாரால்வழக்கம்போல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. ஆனால், அவரைஇன்னொரு வழக்கில் மீண்டும் கைது செய்யும் முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் சமீபத்தில் நடந்த திமுக மாவட்ட மாநாட்டில் வெற்றிகொண்டான் கலந்து கொண்டு, நெஞ்சைஉருக்கிய அந்த நாள் என்ற தலைப்பில், நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்துபேசினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக வெற்றிகொண்டான் மீது விழுப்புரம் போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்த விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
இந் நிலையில் சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடந்த திமுகபொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தார் வெற்றிகொண்டான்.
அப்போது விழுப்புரம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் விழுப்புரம் குற்றவியல் நீதிபதிமுருகனின் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார்.
அவரை 15 நாள்சிறைக் காவலில் வைக்க நீதிபதி முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார் வெற்றி கொண்டான்.
ஜாமீனில் விடுதலை
இந் நிலையில் இன்று காலை வெற்றிகொண்டான் தரப்பில் விழுப்புரம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாத்த நீதிபதி சின்னச்சாமி, அவரை ஜாமீனில் விடுதலை செய்துஉத்தரவிட்டார்.
இதையடுத்து வெற்றி கொண்டான் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை திமுக எம்.பி ஆதிசங்கர் மற்றும்எம்.எல்.ஏ. புகழேந்தி தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அப்போது, வந்தவாசியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாகவெற்றிகொண்டான் மீது இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரைக் கைது செய்யவந்தவாசி போலீசார் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
அப்போது வெற்றி கொண்டானை சுற்றி வளைத்த கடலூர் போலீசார், வந்தவாசி போலீசார் வர தாமதமாகிறது.இதனால் உங்களை கைது செய்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வைத்திருக்குமாறு வந்தவாசி போலீசார்கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் நீங்கள் எங்களுடன் வர வேண்டும் என்றார்.
இதற்கு ஆதிசங்கர், புகழேந்தி மற்றும் வெற்றிகொண்டான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கைது செய்வதாக எழுதித் தந்துவிட்டு கைது செய்யுங்கள், சும்மா காவல் நிலையத்துக்கு வர முடியாது எனவெற்றிகொண்டான் கூறினார். மேலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னரும் என்னைக் கைது செய்வதுசட்டவிரோதமானது என்றார்.
தொடர்ந்து திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் வெற்றிகொண்டான் மீண்டும் கைதாவது உறுதியாகிவிட்டது.
-->-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications