இந்திய ஹாக்கி அணிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னை:
பாகிஸ்தானை தோற்கடித்து ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி இன்றுசென்னை திரும்பியது. விமான நிலையத்தில் இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
வழக்கமாக கிரிக்கெட்டைத் தான் நம்மவர்கள் ஒரு விளையாட்டாகவே மதிப்பார்கள். ஹாக்கி, புட் பால் போன்றவிளையாட்டுக்களை நம் ஆட்கள் கண்டுகொள்வதே இல்லை.
இந் நிலையில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து உலக அளவிலான போட்டிகளில் வெல்ல ஆரம்பித்துள்ளது.இதையடுத்து ஹாக்கியையுைம் நம்மவர்கள் கொஞ்சம் கண்டுகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன் மலேசிய தலைநகர் கோலாலம்பூல் நடந்த 6-வது ஆசியக் கோப்பை ஹாக்கிப்போட்டியின் இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை 4க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்பட்டத்தை வென்றது இந்தியா.
கோப்பையை வென்ற தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய ஹாக்கி அணி இன்று காலை தாயகம்திரும்பியது. விமானம் மூலம் சென்னை வந்த ஹாக்கிரர்களுக்கு, தமிழ்நாடு ஹாக்கி சங்க நிர்வாகிகளும் பெரும்திரளான ரசிகர்களும் உற்சாக வரவேற்பளித்து திக்குமுக்காட வைத்தனர்.
அஞ்சுவுக்கு ரூ. 25 லட்சம்: ஜெ. வழங்கினார்
இதற்கிடையே பாரிதில் நடந்த உலக தடகளப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அஞ்சு ஜார்ஜுக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார். அவரது கணவரும்,பயிற்சியாளருமான பாபி ஜார்ஜுக்கு ரூ. 3.75 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்,
கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு தமிழகத்தில் தான் வசித்து வருகிறார். தமிழகத்தின் சார்பில் பல போட்டிகளில்பங்கேற்று ஏற்கனவே ஜெயலலிதாவிடம் பரிசுகளை வென்றவர் இவர்.
அதே போல சமீபத்தில் லூதியானாவில் நடந்த 31வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதமிழ வீரர்கள் 19 பேருக்கு மொத்தம் ரூ. 9.25 லட்சத்துக்கான காசோலைகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
பெங்களூரில் நடந்த 43வது தேசிய தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகவீராங்கனை சுரேகாவுக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 19 வயதானசுரேகா, உயரம் தாண்டுதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications