சத்துணவுக்கு நிதி குறைப்பு இல்லை: வளர்மதி விளக்கம்!
சென்னை:
சத்துணவுக்கான நிதியைக் குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. மாறாக எத்தனை பேர் பள்ளிக்குவருகிறார்களோ அத்தனை பேருக்கு மட்டும் சத்துணவு வழங்கினால் போதும் என்று மட்டுமே அரசுஉத்தரவிட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
சத்துணவுத் திட்டத்திற்கான நிதியைக் குறைக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை.
கிராம அளவில் சத்துணவுத் திட்டம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதைக் கண்காணிக்க குழுக்கள்அமைக்கப்பட்டன. இந்த கண்காணிப்புக் குழுக்கள் அங்கவன்வாடிகள், சத்துணவு மையங்களில் தீவிர ஆய்வுநடத்தி சில பரிந்துரைகளை அரசிடம் கொடுத்தன.
அந்தப் பரிந்துரைகளின்படி பள்ளிக்கோ அல்லது அங்கன்வாடிக்கோ தினசரி எத்தனை மாணவர்கள்வருகிறார்களோ, அத்தனை பேருக்கு மட்டும் சத்துணவு வழங்கினால் போதும். கூடுதலாக உணவு தயாரித்து அதைவீணாக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவுக்கு, ஒரு குழந்தைக்கு 25 பைசா மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையை மாற்றி 35 பைசாவாக அதிகரித்துஉத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா.
மேலும் சத்தான உணவு வகைகளான பச்சைப் பயறு, கொண்டக் கடலை, உருளைக் கிழங்கு ஆகியவற்றை உணவில்சேர்க்குமாறும் முதல்வர் ஆணையிட்டார்.
அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில் தடங்கல் நேரக்கூடாது என்று முதல்வர் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். எனவே சத்துணவுக்கான நிதியைக் குறைப்பது என்றபேச்சே எழவில்லை என்று கூறியுள்ளார் வளர்மதி.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications