அண்ணா பல்கலையில் தலைமை செயலகம் அமைந்தால் ஏற்படப் போகும் பிரச்சனைகள்
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால்மிகப் பெரும் போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும்என்று கல்வியாளர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழு அரசுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவர்களது கடிதத்தின் சுருக்கம்:
தற்போது தலைமைச் செயலக அலுவலகங்கள் இயங்கி வரும் 10 மாடிக் கட்டடமான நாமக்கல் கவிஞர்மாளிகையின் ஸ்திரத்தன்மையில் பிரச்சினை ஏதும் இல்லை. அந்தக் கட்டடத்தை சரியாக பராமரிக்காதகாரணத்தால்தான் அதில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு தண்ணீர் ஒழுகுகிறது. மற்றபடி கட்டடம் உறுதியாகவேஉள்ளது. இடிந்து விழும் நிலையில் அது இல்லை.
புதிய தலைமைச் செயலகம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படுமானால் அது பல்வேறுசிக்கல்களை ஏற்படுத்தி விடும். சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை (முத்துராமலிங்கத்தேவர் சாலை), அண்ணா சாலை ஆகிய முக்கியச் சாலைகள் அனைத்தும் கோட்டூர்புரத்திற்கு செல்லபயன்படுத்தப்படுகின்றன.
இந்த சாலைகள் அனைத்தும் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி வருகின்றன. மேலும்,சுற்றுச்சூழல் மாசும் அதிக அளவில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் தலைமைச் செயலகம் இங்கு அமைக்கப்பட்டால்,போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் மாசும் அதிகரிக்கும். பாதுகாப்பை காரணம் காட்டி மக்கள்நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும், புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க வேண்டுமானால், சென்னைப் பொருளாதார பள்ளி,அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளி, அண்ணா பல்கலைக்கழக சர்வதேச விடுதி, சென்னை பல்கலைக்கழகதுணைவேந்தர் இல்லம் ஆகியவையும் அகற்றப்பட வேண்டும். இதற்கு கூடுதலாக ரூ. 50 கோடி செலவு அரசுக்குஏற்படும்.
இதுதவிர, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் சாலை ஆகியவற்றில் அமைந்துள்ள கல்விநிலையங்கள், பெரியார் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம், அடையாறு புற்று நோய் மருத்துவமனை, கிண்டிசிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு வருகை தருவோர் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள்உள்ளன.
எனவே புதிய தலைமைச் செயலகத்தை இங்கு அமைக்காமல் வேளச்சேரி, தரமணி, ரேஸ் கோர்ஸ் போன்றபுறநகர்ப் பகுதிகளில் அமைப்பதே சிறந்த முடிவாக இருக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு அரசு காது கொடுக்குமா?
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications