பெங்களூர்- மதுரை, கோவை இடையே புதிய விமான சேவை தொடக்கம்
பெங்களூர்:
பெங்களூர்- மதுரை மற்றும் பெங்களூர்- கோவை இடையே புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர் டெக்கான் நிறுவனம் இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளது. மேலும் பெங்களூர்-சென்னை இடையிலும் விமான சேவையை இந்த நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
பெங்களூர்- மதுரை:
பெங்களூரிலிருந்து தினமும் காலை 10.55 மணிக்கு கிளம்பும் இந்த விமானம் பகல் 12.10க்கு மதுரை விமான நிலையம் சென்றடையும். அங்கிருந்து தினமும் பகல் 12.25க்குப் புறப்பட்டு 1.40 மணிக்கு பெங்களூர் வந்து சேரும்.
கட்டணம் ரூ. 2,400 ஆகும். பெங்களூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்போது தான் இந்த இரு நகரங்களுக்கு இடையே விமான சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவையை மதுரை மண்டல இந்திய தொழிலக சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை ஆகியவை வரவேற்றுள்ளனர். பிற்பகலுக்குப் பதில் காலையில் விமானங்களை இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் அவை கருத்துத் தெரிவித்துள்ளன.
பெங்களூர்-கோவை:
அதே போல பெங்களூர்- கோவை இடையிலும் இந்த நிறுவனம் சேவையைத் தொடங்கியுள்ளது. பெங்களூரிலிருந்து தினமும் காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த விமானம் 6.50க்கு கோவையை அடையும். அங்கிருந்து தினமும் காலை 7.05க்குப் புறப்படும் விமானம் 7.55க்கு பெங்களூர் வந்து சேரும்.
கட்டணம் ரூ. 1,624 ஆகும்.
பெங்களூர் - சென்னை:
அதே போல பெங்களூர்- சென்னை இடையே தினமும் மூன்று விமானங்களை இந்த நிறுவனம் இயக்குகிறது. பெங்களூரில் இருந்து காலை 8.15, பகல் 1 மணி, இரவு 7 மணிக்குப் புறப்படும் இந்த விமானங்கள் முறையே காலை 9.15, பகல் 2.00, இரவு 8.00 மணிக்கு சென்னை சென்றடையும்.
அதே போல சென்னையில் இருந்து தினமும் காலை 9.35, பிற்பகல் 2.20, இரவு 8.50க்குப் புறப்பட்டு முறையே காலை 10.35, பிற்பகல் 3.20, இரவு 9.50க்கு பெங்களூர் வந்தடையும்.
கட்டணம் ரூ. 1,676.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications