மசூதி இடிப்பு: ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்காலத் தடை
லக்னெள:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யஉத்தரவிட்ட ராய்பரேலி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
மேலும் ராய்பரேலி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜோஷி மீதான விசாரணைக்கும் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் துணைப் பிரதமர் அத்ாவனி, மத்திய அமைச்சர் ஜோஷி, உமா பாரதி,வி.எச்.பி. தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ராய்பரேலி நீதிமன்றத்தில்நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் அத்வானி விடுவிக்கப்பட்டார். இதற்கு அவர் மீதான குற்றச்சாட்டை சிபிஐசரியான முறையில் நீதிமன்றத்தில் விளக்காதது தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த வழக்கில் ஜோஷி மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அப்போது பிரதமர் வெளிநாட்டில்இருந்தார். இதனால் ராஜினாமா உடனடியாக ஏற்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு டெல்லி திரும்பிய பிரதமர் வாஜ்பாயை ஜோஷி சந்தித்துப் பேசினார்.அப்போது ஜோஷி ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்றும், ராய்பரேலி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் ஜோஷி மேல் முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும், அவர் மீதான விசாரணையைத் தொடரவும்இன்று இடைக்காலத் தடை விதித்தது.
ஜோஷியின் மேல் முறையீட்டு மனு மீது வரும் நவம்ர் 4ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.
ஜோஷியின் மேல் முறையீட்டு மனு மீது வரும் நவம்ர் 4ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.
இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டவுடன் அது குறித்து பிரதமர் வாஜ்பாய், ஜோஷியுடன் தொலைபேசியில்பேசினார். நீதிமன்றத்தின் தடை மகிழ்ச்சியளிப்பதாக பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications