ஜெ. பிரதமராக ஸ்ரீரங்கத்தில் கஜபூஜைக்கு ரகசிய ஏற்பாடு: 30 கோவில் யானைகள் பங்கேற்கும்
திருச்சி:
ஜெயலலிதா பிரதமராக ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி திருச்சியி ஸ்ரீரங்கம் கோவில் அருகேபிரம்மாண்டமான கஜபூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகள் மிக ரகசியமாகநடக்கின்றன.
சமீபத்தில் அனைத்துக் கோவில் யானைகளுக்கும் ஒரு மாத கால ஓய்வு தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.யானைகளுக்கு அந்தந்தக் கோவில்களிலேயே ஓய்வு தரப்படும் என்று கருதப்பட்டது.
இந் நிலையில் அனைத்துக் கோவில் யானைகளையும் திருச்சிக்குக் கொண்டு வருமாறு அற நிலையத்துறைக்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றை திருச்சியில் ஓரிடத்தில் வைத்திருந்து முழு ஓய்வு தரப் போவதாகஇதற்கு காரணமும் கூறப்பட்டுள்ளது.
ஓய்வைக் காரணமாகச் சொன்னாலும், கஜபூஜை நடத்துவது தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.கோவில் யானைகளை வைத்துத் தான் கஜபூஜை நடத்தப்பட வேண்டும் என ஜோசியர் கூறிவிட்டதால் ஓய்வுதருவதாகக் கூறி அவற்றை திருச்சிக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கோவில் யானைகள் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு பிரம்மாண்டமானமுறையில் கஜபூஜை நடத்தப்படும் என்று தெரிகிறது. ஜெயலலிதாவும் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.இப்போது நடந்து வரும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி தொடங்கியவுடன் எந்த நாளிலும் இந்த பூஜைநடக்கலாம். இதில் முதல்வரும் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.
முதலில் முதுமலையில் இந்த கஜபூஜை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், அது பின்னர் திருச்சிக்குமாற்றப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் அருகே மிகப் பெரிய தோப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு தான்தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்தும் சுமார் 43 யானைகள் கொண்டு வரப்படவுள்ளன.
இதில் 30 யானைகள் தேர்வு செய்யப்பட்டு கஜபூஜை நடக்குமாம். பிரதமராவதற்கு அரசியல் முயற்சிகளைவிடமதரீதியிலான முயற்சிகளையே முதல்வர் அதிகம் நம்புவதாகத் தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications