திருப்பதியில் கண்ணி வெடித் தாக்குதல்: நாயுடு காயங்களுடன் உயிர் தப்பினார்
திருப்பதி:
திருப்பதியில் இன்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காயங்களுடன் உயிர்தப்பினார்.
ஒரு அமைச்சர் உள்பட பலரும் காயமடைந்துள்ளனர். திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில்பங்கேற்க முதல்வர் சந்திரபாபு நாயுடு காரில் சென்று கொண்டிருந்தார். இன்று மாலை 4.25 மணியளவில் காட்ரோட்டில் அவரது கார் வரிசை சென்றபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்துச் சிதறியது.
இதில் சந்திரபாபு நாயுடுவின் கார் உள்பட பல கார்கள் சேதமடைந்தன. இதில் நாயுடும் அவரது கார் டிரைவரும்காயமடைந்தார். உடனடியாக நாயுடு, திருமலையில் உள்ள எஸ்.வி.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இன்னொரு காரில் வந்து கொண்டிருந்த ஆந்திர சாப்ட்வேர் வளர்த்துறை அமைச்சர் சந்திரசேகர் ரெட்டி, எம்.எல்.ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் காயமடைந்தார். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நக்சல்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வெடித்துச் சிதறியது கிளேமோர் மைன் என்ற ரகத்தைச் சேர்ந்த கண்ணிவெடியாகும். இது சாலையோர மரத்தில்புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த ரக கண்ணிவெடிகளை அதிகம் பயன்படுத்துவது நக்சல்கள்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications