போலி சிபிஐ அதிகாரி கைது
சென்னை:
சிபிஐ அதிகாரிகள் போல நடித்து, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பணம் மற்றும் நகைகளைப் பறித்தகும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நகைக் கடைகளில் சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட ஒரு கும்பல்நகை மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றதாக போலீஸாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தனிப்படைஅமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி ஆந்திர மாநலம் குண்டக்கல் நகருக்குச் சென்று அங்குபதுங்கியிருந்த அக்பர் அலி என்பவரைக் கைது செய்தது. இவர் தலைமையில்தான் அந்த போலிஸ சிபிஐ கும்பல்செயல்பட்டு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அக்பர் அலியிடமிருந்து ரூ. 1.5 லட்சம் பணம், 300 கிராம் தங்கம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. அக்பர் அலியுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரிகள் போல நடித்த பணம், நகை பறித்த சிக்கந்தர்பாஷா, அயூப் கான் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications