பந்த்: சென்னை-பெங்களூர் ரயில்கள் பாதிப்பு
சென்னை:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான தாக்குதலைக் கண்டித்து அவரது சொந்தத் தொகுதியான குப்பம்பகுதியில் தெலுங்கு தேசத் தொண்டர்கள் நேற்று பந்த் நடத்தினர்.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு பிற்பகல் 12 மணிக்கு வர வேண்டிய லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலும் குப்பத்தில்தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த ரயில் 3 மணி நேரம் தாமதமாக 2.55க்குத் தான் வந்து சேர்ந்தது.
அதேபோல, பிற்பகல் 2.45 மணிக்கு வந்திருக்க வேண்டிய பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 5.25மணிக்குத்தான் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
மாலை 3.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவதாக இருந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் பந்த் காரணமாகமாலை 6 மணிக்குத்தான் பெங்களூர் கிளம்பிச் சென்றது. அதேபோல, சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக 2.45 மணிக்குத்தான் கிளம்பிச் சென்றது.
திருப்பதி எம்எல்ஏ சென்னையில் அனுமதி:
திருப்பதியில் நக்சலைட்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த திருப்பதி சட்டசபை தொகுதியின்தெலுங்கு தேச எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்ணி வெடித் தாக்குதல் நடந்தபோது இவரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் காரில் இருந்தார். அவருக்குகாயங்கள் மிக பலமாக இருப்பதால், இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல் நிலை நன்கு தேறி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் குணமடைந்து ஊர் திரும்பலாம்என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களில் ஒருவரான டாக்டர் மதன் மோகன் ராவ் தெரிவித்தார்.
-
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
8000 கோடி சொத்து..திரிஷாவின் எக்ஸ் வருண் மணியன்! மல்டி மில்லியனனுடன் நிச்சயதார்த்தம்! பிரிந்தது ஏன்? -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
பாஜகவின் வக்கிர அரசியல்.. விஜய் நிகழ்த்த போகும் அதிசயம்.. நாஞ்சில் சம்பத் அப்டேட் -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
விஜய் பக்கம் வண்டியை திருப்பிய பாஜக.. கிலியில் எடப்பாடி பழனிசாமி.. செம டிவிஸ்ட் -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
விஜய்யின் இமேஜ் உடைந்து விட்டது! பார்த்திபன் அப்படி பேசியதற்கு பின்னால் இருக்கும் காரணம்! பிரபலம் ஓபன் -
மௌன விரத மாஸ்டர் விஜய்! பெண்களுக்காக பேசுவாரு, திரிஷா பற்றி வாய் திறக்க மாட்டாரு! ப்ளூ சட்டை மாறன் நேரடி அட்டாக் -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications