நான் அப்படியா சொன்னேன்?: பத்திரிக்கைகள் மீது ஜெ. பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகபத்திரிக்கைகள் பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நேற்று அமைச்சரவைக் கூட்டம் முடிந்தவுடன் பத்திரிக்கையாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போதுகண்ணப்பன் விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் பேசப்பட்டதா என்று ஒரு நிருபர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதமரின் பதில்வரும் வரை முடிவெடுப்பதை தள்ளி வைத்துள்ளோம் என்றார்.

ஆனால், இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கண்ணப்பன் விவகாரம் குறித்து அமைச்சரவையில் பேசப்படவே இல்லை. ஆனால், இந்த விவகாரம் பேசப்பட்டதுபோலவும், முடிவெடுப்பது மட்டுமே தள்ளி வைக்கப்பட்டுள்ளது போலவும் நான் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பு, அதைக் கட்டுவது ஆகியவைகுறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்களை நான் சந்தித்தபோது கூட புதிய தலைமைச்செயலகம் குறித்த எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது.

கண்ணப்பன் குறித்து எண்ணமே இல்லை. இதனால் தான், அமைச்சரவையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்றுநிருபர்கள் கேட்டபோது, நான் முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று பதில் சொன்னேன். நான் சொன்ன பதில் புதியதலைமைச் செயலகம் தொடர்பானது. கண்ணப்பனை மனதில் வைத்துக் கொண்டு தான் இப்படிக் கேட்கிறார்கள்என்று நான் நினைக்கவே இல்லை.

ஆனால், கண்ணப்பனைக் கைது செய்வது தொடர்பாக முடிவெடுப்பதை அமைச்சரவை ஒத்தி வைத்துள்ளது என்றுநான் பதில் சொன்னதாக எல்லா பத்திரிக்கைகளும் எழுதியுள்ளன.

இதனால் தான் நான் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதே இல்லை. நேரத்தை செலவழித்து இவர்களைச் சந்தித்துபதில் சொன்னாலும், எதையாவது அவர்கள் திரித்து எழுதி விடுகிறார்கள். அப்புறம் அதற்கு விளக்கம் சொல்லவேஎனக்கு நேரம் சரியாக இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களுக்கு வேண்டுமானால் கண்ணப்பன் விவகாரம் மட்டுமே ஒரே முக்கியமான விஷயமாகஇருக்கலாம். எனக்கும் அரசுக்கும் ஏகப்பட்ட பொதுப் பிரச்சனைகள் உள்ளன. மக்கள் நலப் பிரச்சனைகளில்கவனம் செலுத்தவும், நேரம் செலுத்தவும், அதற்காக கவலைப்படவுமே நேரமும் சக்தியும் போதவில்லை.

இந் நிலையில் நான் ஒன்று சொல்ல அதை வேண்டுமென்றே திரித்து செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.

கண்ணப்பன் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவே இல்லை.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+