காதலனைக் கொன்று அரவாணி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்:

காதலன் வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம் அடைந்த அரவாணி, அவரைக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொணடார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவ மளிகைக் கடை வியாபாரிபரிமளம் (வயது 30). இவரது உறவினர் தனலட்சுமி (30). இவர் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாதஅரவாணியாவார்.

இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் பரிமளம்வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இதில் தனலட்சுமிக்கு விருப்பமில்லை.

இதையடுத்து பரிமளத்தை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் தனலட்சுமி.

சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த பரிமளத்தின் கழுத்தை கத்தியால் தனலட்சுமி வெட்டினார். பின்னர்கத்தியால் வயிற்றில் சரமாரியாாகக் குத்தினார். இதில் பரிமளம் அந்த இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து, எனக்குக் கணவனாக இருக்க வேண்டியவரை அடுத்த பெண்ணிடம் சேர்ந்து வாழவிட மாட்டேன்.எனவே அவரைக்கொன்று நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல என்றுஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி. ராமசாமி தலைமையிலான படை விரைந்து வந்து இரு உடல்களையும்கைப்பற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+