காந்தி ஜெயந்தியன்று "ரம்"முடன் சென்ற முதியவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காந்தி ஜெயந்தியன்று, ரம் பாட்டில்களுடன் சென்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காந்தி ஜெயந்தியான கடந்த 2ம் தேதி மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார்ஆங்காங்கே சோதனையிலும் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் பெட்டிகளுடன் சென்ற சாலமன் என்ற 56 வயது முதியவர் பிடிபட்டார்.அவரது பெட்டிகளை போலீசார் சோதனையிட்டபோது அதில் 40 ரம் பாட்டில்கள் இருந்தன.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ராணுவ கேன்டீனிலிருந்து இந்த ரம் பாட்டில்களைவாங்கியதாகவும், இவற்றை விற்பதற்காகக் கொண்டு செல்வதாகவும் கூறினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒயின் ஷாப்கள் மூடப்பட்டதால், அந்த தினத்தில் குடிமகன்களுக்கு விற்கவேஇவற்றைக் கொண்டு சென்றதாகவும் கூறினார்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக விசாரணையில் வைக்கப்பட்ட இவர் நேற்று கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications