சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஐ.நா. அவசரக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

ஐ.நா. சபை:

தனது நாட்டின் மீது பாலஸ்தீன பெண் விடுதலை இயக்கத் தீவிரவாதி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகபாலஸ்தீனத்தின் மீதும் சிரியாவின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து வளைகுடாவில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த அசாதாரணமான நிலைமை குறித்துவிவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

சிரியா மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஆழ்ந்த மெளனம் சாதித்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன் இஸ்ரேலின் ஹைபா நகரில் உள்ள ஹோட்டலில் பாலஸ்தீன விடுதலை இயக்கமானஇஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் பெண் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 19 யூதர்கள்கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இந் நிலையில் யாரும் எதிர்பாரதவண்ணம் சிரியாவின் மீதும் தாக்குதல் நடத்தியது.

சிரியாவில் பாலஸ்தான தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் உள்ளதாகக் கூறி அந் நாட்டின் தலைநகர்டமாஸ்கசுக்கு அருகே உள்ள யெய்ன் சாகேப் நகர் அருகே இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தின.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு உலக அளவில் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. இது போன்ற தாக்குதல்களைஇஸ்ரேல் நிறுத்திக் கொள்ளாவிட்டால் நாங்களும் திருப்பித் தாக்குவோம் என சிரியா எச்சரித்துள்ளது.

ஏற்கனவே பதற்றம் நிறைந்த மத்திய ஆசியாவில் இந்த புதிய தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் மீண்டும் இந்தப் பிராந்தியத்தில் பெரும் மோதல் ஏற்படக் கூடும் என பாலஸ்தீனஅதிபர் அராபத் எச்சரித்துள்ளார். மேலும் இந்த புதிய சிக்கலை எதிர்கொள்ள அகமத் குரேஷி என்பவரைபாலஸ்தீனத்தின் புதிய பிரதமராகவும் அராபத் நியமித்துளளார். அவரது தலைமையில் 8 பேர் கொண்ட அவசரகால அமைச்சரவையையும் அவர் உருவாக்கியுள்ளார்.

மேலும் வெஸ்ட் பேங்க் மற்றும் காஸா ஆகிய பாலஸ்தீனப் பகுதிகளில் அவசர நிலையையும் அவர் பிரகடனம்செய்துள்ளார்.

இதற்கிடையே பாலஸ்தீனத்தில் இருந்தே யாசர் அராபத்தை நாடு கடத்துவோம் என இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.தான் பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் பாலஸ்தீனத்தை நிர்வகிக்கவே புதிய அமைச்சரவையைஅராபத் உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+