இந்தோனேஷியாவில் வாஜ்பாய்க்கு சிறப்பான வரவேற்பு
பாலி (இந்தோனேஷியா):
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் வாஜ்பாய் நேற்றிரவு இந்தோனேஷியா வந்து சேர்ந்தார்.
அவருக்கு பாலி நகரில் மிகச் சிறப்பான ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேஷிய அதிபர் மேகாவதிசுகர்னோபுத்ரி, சீனப் பிரதமர் வென் ஜியாபோ, தென் கொரிய அதிபர் ரோ மோ ஹூயூன், வியாட்நாம் பிரதமர்பான் வான் காய், சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டொங், பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியோ அரோயோஆகியோரையும் வாஜ்பாய் சந்திக்கவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது இந்தியாவும் இந்தோனேஷியாவும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த இணைந்துசெயல்படுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
இந்தோனேஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 8ம் தேதி தாய்லாந்து செல்லும் வாஜ்பாய் அந் நாட்டுப்பிரதமர் தக்ஷின் சினாவத்ராவுடன் பாங்காக்கில் ஆலோசனை நடத்துகிறார். மேலும் தாய்லாந்து நாட்டின்நாடாளுமன்றத்திலும் வாஜ்பாய் உரையாற்றுகிறார்.
இது போன்ற கெளரவத்தை வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு தாய்லாந்து வழங்குவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications