திருச்சி பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 6 அல்-உம்மாவினருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி நகர பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் அல்-உம்மாவைச் சேர்ந்த 6 பேருக்குஇரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

1999ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இந்தக் கொலை நடந்தது. திருச்சியில் முஸ்லீம்கள் நிறைந்த பீமா நகர் பகுதியில்கிளீனிக் வைத்திருந்த டாக்டர் ஸ்ரீதர் அங்கு மிகப் பிரபலமானவராய் இருந்தார். தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினரான இவர் திருச்சி நகர பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆண்டுதோறும் வினாயகர் சதுர்த்தி விழாவை மிக விமரிசையாக நடத்துவார்.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது திருச்சியில் இருந்து பல கரசேவர்களை அயோத்திக்கு ஸ்ரீதர்அனுப்பி வைத்தார். இதனால் அவரைத் தீர்த்துக் கட்ட அல்-உம்மா கும்பல் திட்டமிட்டது. இதையடுத்து நெடு நாள்திட்டம் தீட்டி அவரை அல்-உம்மாவினர் வெட்டிக் கொன்றனர். கிளீனிக்கில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வழி மறித்து வெட்டிக் கொன்றது.

தனது வீட்டுக்கு அருகிலேயே அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றிவிடப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திகோவையைச் சேர்ந்த ஜாகீர் ஹூசேன், மேலப்பாளையத்தைச் சேர்ந்த தடா மூசா, சித்திக் அலி, ரஹமதுல்லா கான்,பாதுஷா, தமீமுல் அன்சாரி, ஷாஜகான், பஷீர் முகம்மத், சையத் அலி, நெல்லையைச் சேர்ந்த ஷேக் மதார், நாகூரைச்சேர்ந்த உமர் பாரூக், திருச்சியைச் சேர்ந்த கலிலூர் ரஹ்மான், முகம்மத் பாரூக், ஷம்சுதீன் ஆகிய 14 பேரைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. டாக்டர் ஸ்ரீதரின் மகள்லட்சுமி பிரியா உள்பட 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து திருச்சி விரைவு நீதிமன்றத்துக்கு இந்தவழக்கு மாற்றப்பட்டது.

இங்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி சோலைமலை,

ஜாகீர் ஹூசேன், தடா மூசா, சித்திக் அலி, ரஹ்மத்துல்லா தான், ஷேக் மதார், உமர் பாரூக் ஆகியோருக்கு இரட்டைஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி. கொலை வழக்குக்காக ஒரு ஆயுள் தண்டனையும், கொலைச்சதிக்காக இன்னொரு ஆயுள் தண்டனையும் விதித்தார்.

ஷாஜகானுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்தார். இவர் மீது கொலைச் சதி வழக்கு இல்லை.

அதே நேரத்தில் சையத் அலி, பஷீர், தமீமுல் அன்சாரி, பாதுஷா, கல்லூர் ரஹ்மான், முகம்மத் பரூக் ஆகிய 6பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார்.

தீர்ப்பை ஒட்டி 14 பேரும் பலத்த காவலுடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்தைச் சுற்றிலும் ஆயதம் தாங்கிய போலீசாரும், மோப்ப நாய்களும், வெடிகுண்டு நிபுணர்களும்நிறுத்தப்பட்டிருந்தனர். அல் உம்மாவினர் கொண்டு வரப்பட்ட வேன்களின் முன்பும் பின்னும் ஏராளமான போலீஸ்ஜீப்கள் பாதுகாப்புக்கு வந்தன.

இந்தத் தீர்ப்பையொட்டி திருச்சி நகர லாட்ஜ்களில் நேற்றிரவு தீவிர சோதனை நடந்தது. வாகன சோதனைகளும்நடந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+