சட்டீஸ்கர் மாநில காங். முதல்வர் மீது சிபிஐ வழக்கு
டெல்லி:
போலியான ஆவணங்களைத் தயாரித்தாக சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் அஜீத் ஜோகி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்க மத்திய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ்பீரோ (ஐ.பி) திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, அதை நிரூபிப்பதற்காக போலி ஆவணங்களை ஜோகி தயாரித்தார்என்று சிபிஐ கூறுகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில்அவர் மீது சிபிஐ இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள்தயாரித்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் இன்டெலிஜென்ஸ் பீரோ மீது ஜோகி ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார். காங்கிரஸ் ஆட்சிசெய்யும் மாநில முதல்வர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு பெயரைக் கெடுக்க முயற்சி நடப்பதாகவும்,தேர்தலை மனதில் வைத்து உளவுப் பிரிவு இந்த வேலையைத் தொடங்கியுள்ளதாகவும், இந்தச் செயலுக்கு பிளாக்சீ என்று இன்டெலிஜென்ஸ் பீரோ பெயரிட்டுள்ளதாகவும் கூறினார்.
எனது மனைவி ரேணு பெங்களூரில் ஒரு மலேசிய நிறுவனத்துடன் இணைந்து சாப்ட்வேர் நிறுவனம்ஆரம்பித்துள்ளதாகவும், நான் சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ளதாகவும் பொய்யானகுற்றச்சாட்டுகளைக் கிளப்பி என் பெயரைக் கெடுக்கவே இந்த பிளாக் சீ திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.
அது தொடர்பாக சில ஆவணங்களையும் பத்திரிக்கைகளுக்குத் தந்தார். இதை பிரதமர் வாஜ்பாய்க்கும் அனுப்பிவைத்தார்.
இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு வாஜ்பாய் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜோகியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதை விசாரித்து வந்த சிபிஐ இப்போது ஜோகி மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பொய்யானதகவலைக் கூறி ஐ.பியின் பெயரைக் கெடுக்க முயன்றதாகவும் இதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்தாகவும்ஜோகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தான் சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதிகளைதேர்தல் கமிஷ்னர் லிங்டோ அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுவுடன் தங்கள் மீதானகிரிமினல் வழக்கு விவரங்களையும், சொத்துப் பட்டியயும் சேர்த்தே தாக்கல் செய்ய வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
வழக்குகள் தீவிரமாக இருந்தால் அவர்களை போட்டியிட விடாமல் தேர்தல் கமிஷன் தடுக்கும். இந் நிலையில்காங்கிரஸ் முதல்வர் அஜீத் ஜோகி மீது இந்த வழக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications