ஜெ. இன்று திருவண்ணாமலை பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா இன்று திருவண்ணாமலை செல்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 235 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை ஜெயலலிதா இன்று துவக்கிவைக்கிறார். அரசுக் கல்லூரி வளாகத்தில் பகல் 2.30 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க ஜெயலலிதாஹெலிகாப்டரில் திருவண்ணாமலை செல்கிறார்.
விழாவுக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்குகிறார்.
ரூ. 124.40 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் முதல்வர், ரூ. 91.11கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இது தவிர ரூ. 19.35 கோடி அளவுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஏழை, எளியவர்களுக்கு ஜெயலலிதாவழங்குவார். இதன் மூலம் 20,653 பேர் பலனடைய உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications