3 கோவை மாணவர்கள், ஆசிரியர் கோவா கடலில் மூழ்கி சாவு
கோவா:
கோவாவுக்கு சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கடலில் மூழ்கிபதாபமாக இறந்தனர்.
கோவையைச் சேர்ந்த பாரதி வித்யா மந்திர் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தங்களதுஆசிரியர்களுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்குள்ள கோல்வா கடற்கரைக்குச் சென்றமாணவர்களில் சிலர் குளிக்க விரும்பினர். ஆசிரியர்களும் அதற்கு அனுமதி அளித்தனர்.
மழை பெய்து கொண்டிருந்ததால் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் அதைப்பொருட்படுத்தாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் குளிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நான்கு மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினர், ஒருஆசிரியரும் கடலில் மூழ்கினார்.
இதையடுத்து அப் பகுதியில் இருந்தவர்கள் கடலில் குதித்து ஸ்ரீகாந்த் என்ற மாணவரை உயிருடன் மீட்டனர்.ஆனால் பிரவீன், நகேஷ், திலிப் குமார் ஆகிய மாணவர்கள் மற்றும் பிஜு என்ற ஆசிரியர் ஆகியோர் கடலில்அடித்துச் செல்லப்பட்டு விட்டனர். அவர்களை மீட்க முடியவில்லை.
இதனால் அந்த நால்வருமே இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
கோவா கடற்கரைப் பகுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று சுற்றுலாப் பயணிகள் தரப்பில் அடிக்கடி புகார்கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் கோவா அரசு அதை பொருட்படுத்தாமல் உள்ளது.
இதனால் சுற்றுலா வரும் பயணிகள், கடலின் தன்மை குறித்து அறியாமல் குளிக்கப் போய் உயிரை விடுவது இங்குஅடிக்கடி நடக்கும் சம்பவங்களாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications