மணல் அள்ள அரசு விதித்த தடை ரத்து: நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆற்றில் மணல் அள்ள தனியாருக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து, அரசே மணல் அள்ளி விற்கும்முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அளவுக்கு மீறி ஆற்றுப் படுகைகளில் மணல் எடுப்பது, திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவது, அதிகாரிகளைத்தாக்குவது போன்ற செயல்களில் காண்ட்ராக்டர்கள் ஈடுபட்டதால், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளின்உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது.

குாவரிகளை தன் வசப்படுத்தி அரசே மண் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

இதை எதிர்த்து கரூர் மாவட்டம் வெடிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆற்றுப் பகுதிகள் தவிர தனியார் நிலங்களிலும் மணல் அள்ள அரசு தடைவிதித்துள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றார்.

ஆனால், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், அரசுக்குச்சொந்தமான நிலம் என்பதால் மணல் குவாரிகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு உரிமை உண்டு. அந்த இடத்தை அரசேஎடுத்துக் கொள்வது தொடர்பாக முன்கூட்டியே குத்தகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம்இல்லை என்றார்.

ஆனால், மனுவை விசாத்த நீதிபதி கோவிந்தராஜன், பட்டா நிலங்களில் மணல் அள்ளுவதைத் தடை செய்யும்அதிகாரம் அரசுக்கு இல்லை என்பது தெரிய வருகிறது. மேலும் நோட்டீஸ் கொடுக்காமல் உரிமத்தை ரத்துசெய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.

எனவே அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை அல்லதுகுத்தகைதாரரின் குத்தைகக் காலம் முடியும் வரை அரசின் உத்தரவு அமல்படுத்தப்படக் கூடாதுஎன்றார்.

பின்னர் வழக்கை 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்தது. இந்தமனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்இன்று பிற்பகலில் விசாரிக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+