சித்ரா பலாத்கார வழக்கு: கைதான பா.ஜ.க. புள்ளிக்கு ஜாமீன்
சென்னை:
கோவையைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டபா.ஜ.க. புள்ளியான தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன். இவர் நர்ஸ் ஆலிஸ் என்பவரின் உதவியுடன் சித்ரா என்ற குடும்பப்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார்.
அதை நர்சின் உதவியால் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டார். பின்னர் இதைக் காட்டி மிரட்டியே சித்ராவைபலமுறை கற்பழித்தார்.
-->
உன்னியில் தொல்லை அளவுக்கு மீறவே போலீஸில் புகார் கொடுத்தார் சித்ரா. இதைத் தொடர்ந்து உன்னியும்,அவருக்கு உடந்தையாக இருந்த நர்ஸ் ஆலிசும் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உன்னி மனு செய்தார். அந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம், உன்னி கிருஷ்ணனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
விடுதலையான பிறகு ராமநாதபுரத்தில் தங்கியிருந்து அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திடவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications