நக்கீரன் கோபாலின் காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலின் சிறைக் காவல் அக்டோபர் 31ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொடா சட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவருக்கு பொடாநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இருப்பினும் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்து விட்டது. இதையடுத்து கோபால் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
அவரது சிறைக் காவல் 180 நாட்களை எட்டியதையொட்டி கோபால் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்குக்கொண்டு வரப்பட்டார்.
அரசு வக்கீல் ஜெயக்குமார், நீதிபதி ராஜேந்திரனிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,
கோபாலின் சிறைக் காவல் 180 நாட்களை தாண்டி விட்டது. பொடா விதிறைகளின்படி 180 நாட்களுக்குள்,குற்றவாளி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுத் தரப்பு விசாரணை முடிவடைந்போதும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளஉத்தரவுப்படி அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கோபால் மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 27 ம் தேதி நடக்கவுள்ளது. எனவே கோபாலின் சிறைக் காவலைநீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அப்போது கோபாலின் வக்கீல் இளங்கோ குறுக்கிட்டு, அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் வேறு சில வழக்குகள்தொடர்பாக கோபால் ஆஜராக வேண்டியுள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ராஜேந்திரன், வழக்கை அக்டோபர் 31ம் தேதிக்குஒத்திவைத்தார்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications