கலாம் இன்றிரவு சென்னை வருகை: கமாண்டோக்கள் குவிப்பு
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று சென்னை வருகிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது தாக்குதல்நடந்ததைத் தொடர்ந்து கலாமுக்கும் மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
நேற்றே 4 குண்டு துளைக்காத கார்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. அதே போல 25க்கும் மேற்பட்ட கமாண்டோக்களும் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர்.
2 நாட்கள் சென்னையில் தங்கியிருக்கும் கலாம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தை நாட்டுக்குஅர்ப்பணித்து வைக்கிறார். இன்று இரவு 10.10 மணிக்கு சென்னை வந்து சேரும் குடியரசுத் தலைவர், நேராகஆளுநர் மாளிகைக்குச் சென்று தங்குகிறார்.
நாளை காலை 9.20 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். அங்குள்ள ராக்கெட்ஏவுதளத்தைப் பார்வையிட்ட பின்னர் விஞ்ஞானிகளையும் சந்திக்கிறார். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் தொடர்பாகவிஞ்ஞானிகளுக்கு அவர் யோசனைகள் வழங்குவார் என்று தெரிகிறது.
பின்னர் மாலை 3.30 மணியளவில் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் வரும் கலாம், அங்குள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
மாலை 5.30 மணியளவில் மியூசிக் அகாடமியில் நடக்கும் சங்கர நேத்ராலயாவின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளைத்துவக்கி வைத்த பின் இரவு 7 மணிக்கு டெல்லி திரும்புகிறார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications