நக்சல்கள் தமிழகத்தில் ஊடுருவல்: சென்னையில் ஆந்திர போலீஸ் படை
சென்னை:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கண்ணி வெடி வைத்துத் தாக்கிய நக்சலைட்டுகள், தமிழகத்திற்குள்ஊடுருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து விசாரிக்க ஆந்திர போலீஸார் தமிழகம் வந்துள்ளனர்.
திருப்பதி அருகே மலைப் பாதையில் வைக்கப்பட்ட கண்ணி வெடியில் சிக்கிய சந்திரபாபு நாயுடு காயமடைந்தார்.இரண்டு எம்.எல்.ஏக்கள் படுகாயமடைந்தனர். மக்கள் போர்க்குழு நக்சலைட் அமைப்புதான் இந்தத் தாக்குதலைநடத்தியது.
கண்ணிவெடி வைத்த நக்சலைட்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவியிருப்பதாக ஆந்திர போலீஸாருக்கு தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து ஆந்திராவிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
இங்கு தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பெரம்பலூர், தர்மபுரி, சேலம்ஆகிய நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் இரு மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டைநடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு மெத்தனம்: காங்.புகார்
இதற்கிடையே தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மத்திய பாரதீய ஜனதா ஆட்சி மிகவும் மெத்தனமாக உள்ளதாகஅகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சத்யஜித் கெய்க்வாட் குற்றம் சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் மத்தியஅமைச்சர் கண்ணப்பன் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது.
விடுதலைப் புலிகள் விவகாரம் என்றில்லை, வட கிழக்கு தீவிரவாதம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கும் பா.ஜ.க.அரசே காரணம்.
பா.ஜ.க. அரசு எடுக்கும் எந்த முடிவும் நாட்டுக்கு ஆபத்தாகவே முடிகிறது. நக்சலைட்டுகளை ஒடுக்குவதிலும் மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு சரிவர ஒத்துழைப்பதில்லை என்றார் அவர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications