கிராம பஞ்சாயத்துகளை தடை செய்ய சட்டம் வருகிறது!
சென்னை:
பஞ்சாயத்து என்ற பெயரில் கிராமங்களில் மக்களைக் கடுமையாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் தண்டிக்கும்நடைமுறையை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கிராமங்களில் பஞ்சாயத்துக் கூட்டம் என்ற பெயரில் ஆலமரத்தடி கட்டப் பஞ்சாயத்துக்கள் நடந்து வருகின்றன.
நூற்றாண்டுகளாய் இவை நடந்தாலும், காலத்தின் போக்குக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் இன்னும் கையில் சூடம்கொளுத்துவது, ஆண்- பெண் பேதம் பாராமல் வெயிலில் மண்டியிட வைப்பது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது,சாட்டையடி, கும்பிட்டு விழ வைப்பது, ஏழைகளுக்கும் கூட ஆயிரக்கணக்கில் அபராதம் விதிப்பது என தனிகோர்ட்டுகளையே நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலான தண்டனைகள் கொடூரமாக இருப்பதில்லை என்றாலும் பல நேரங்களில் மனித உரிமை மீறல்கள்நடப்பது வழக்கமாகவே உள்ளது.
குருட்டு நம்பிக்கைகள், பழமைவாத சிந்தனைகளில் ஊறிக் கிடக்கும் இந்த கிராமத்து பெரிசுகள்கண்மூடித்தனமாக தண்டனைகளை வழங்குவது சமீப காலமாக செய்திகளில் அதிகமாகவே அடிபடஆரம்பித்துவிட்டது.
இந்தப் பஞ்சாயத்துக் கும்பல்களிடம் பெரும்பாலும் மாட்டிக் கொள்வது ஏழைகளும், தலித்களும் தான்.
தலித்கள், படித்தவர்களாவே இருந்தாலும், அந்த ஊரின் படிப்பறிவில்லாத நாட்டமைக் கும்பல்களின்பேச்சுக்களைக் கேட்காவிட்டாலோ, அவர்களை மதிக்கத் தவறினாலோ பஞ்சாயத்துகளுக்கு இழுத்துவரப்பட்டுவிடுகின்றனர். கொடுக்குள்ளாக்கப்படுகின்றனர்.
கிராமங்களில் பணக்காரர்களோ, உயர் ஜாதிக்காரர்களோ பெரும்பாலும் பஞ்சாயத்துகளிடம் சிக்குவதில்லை.அப்படியே மாட்டினாலும் அவர்களது ஜாதியினர் தான் பஞ்சாயத்துக்கும் தலைவர்களாக இருப்பார்கள் என்பதால்அவர்களுக்கு குரூர தண்டனைகள் கிடைப்பதில்லை.
சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த 3 பஞ்சாயத்துக் கொடுமை வழக்குகளில் (பெரம்பலூர் அருகே தாயாருடன்சேர்த்து மண்டியிட வைக்கப்பட்ட பி,எஸ்.என்.எல். பெண் ஊழியர் சுகந்தி, அதே மாவட்டத்தில் திருடியதாககையில் சூடம் ஏற்றிக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட இரு சகோதரிகள், உயர் ஜாதியினரின் பேச்சை கேட்கமறுத்ததால் அபராதம் கட்டியதால் அவமானமடைந்து தற்கொலை செய்து கொண்ட முதியவர்)பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தலித்களே.
இதில், படித்தவர் என்பதால் சுகந்திக்கு மட்டுமே நீதிமன்றத்தை அணுக வழி கிடைத்தது. நியாயமும் கிடைத்தது.சுகந்தியையும் தாயாரையும் மண்டியிட வைத்து கொடுமைப்படுத்திய ஊர் பஞ்சாயத்தினரை கடுமையாக கண்டித்தஉயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம், அதே பஞ்சாயத்துக் கும்பலை சுகந்தியிடமே மன்னிப்பு கேட்க வைத்தார்.
அத்தோடு பஞ்சாயத்து என்ற பெயரில் கடுமையான தண்டனைகளை வழங்குவதைத் தடை செய்ய சட்டம்கொண்டு வரவும் அரசுக்கு யோசனை தெரிவித்தார் நீதிபதி.
இந் நிலையில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
சட்டத்திற்குப் புறம்பான இந்த தண்டனைகளுக்கு தடை விதித்து புதிய சட்ட மசோதாவை, வரும் சட்டசபைக்கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.
இந்த மசோதாவை தயாரிக்கும் பணியில் சட்டத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications