குத்தகை நிலத்தில் மண் அள்ள செவ்வாய்க்கிழமை வரை தடை!
சென்னை:
ஆற்றுப் படுகைகள் மற்றும் குத்தகை நிலங்களில் அரசோ, குத்தகைதாரர்களோ அடுத்த வாரம் செவ்வாய்கிழமைவரை மணல் அள்ளக் கூடாது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
அதே நேரத்தில் குத்தகை இல்லாத மற்ற இடங்களில் அரசு மட்டும் மணல் எடுத்து விற்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அளவுக்கு மீறி ஆற்றுப் படுகைகளில் மணல் எடுப்பது, திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவது, அதிகாரிகளைத்தாக்குவது போன்ற செயல்களில் காண்ட்ராக்டர்கள் ஈடுபட்டதால், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளின்உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது.
குவாரிகளை தன் வசப்படுத்தி அரசே மண் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கரூரைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில குத்தகைதாரர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன், அரசின் உத்தரவுக்கு நேற்று இடைக்காலத் தடை விதித்தார். உரிமம்பெற்றவர்கள் மணல் அள்ளி விற்கலாம் என்று அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே நேற்றே உடனே மேல் முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், குத்தகை நிலங்களில் தனியாரோ, அரசோ மணல் அள்ள இடைக்காலத் தடைவிதித்தனர்.
மேலும் குத்தகை நிலங்கள் குறித்த முழுப் பட்டியலை வழங்கவும் அரசுக்கு நேற்று உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று காலை அரசு வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் குத்தகை நிலங்களின் பட்டியலை நீதிமன்றத்தில்வழங்கினார். அப்போது சில காலத்திற்கு மணல் அள்ளுவதற்கு விடுமுறை விடலாமா என்று தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி கேட்டார். அதற்கு, அப்படிச் செய்தால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் என்று சந்திரன்தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து விரிவான பதிலைத் தருமாறு கூறி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு வழக்கைஒத்திவைத்தார் தலைமை நீதிபதி. மேலும், அதுவரை குத்தகை நிலங்களில் மணல் அள்ள விதிக்கப்பட்டதடையுத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவினால் பட்டா நிலங்களில் உள்ள 32 மணல் குவாரிகளிலும், 128 ஆற்றுப் படுகைகளிலும் அரசும்,தனியாரும் மணல் அள்ள முடியாது. மீதியுள்ள 79 இடங்களில் அரசு மட்டும் எந்த தடையுமின்றி மணல் எடுத்துவிற்கலாம்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications