மளிகைக் கடை ஊழியரை கடத்திச் சென்று விடுவித்த வீரப்பன் கும்பல்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கும்பல் மளிகைக் கடை ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று பின்னர்விடுவித்துள்ளனர். ஆனால், இந்தச் செய்தியில் உண்மையில்லை என கர்நாடகம் மறுக்கிறது.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள கத்திரிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடை ஊழியர்செல்வம் (வயது 27) என்பவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.
காட்டுப் பகுதியில் நுழைந்த அவரை சந்தனக் கடத்தல் வீரப்பன் பார்த்துவிட்டுக் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை எடுத்து வருமாறும்,அதன் பின் 3 நாட்களில் செல்வத்தை விடுதலை செய்துவிடுவதாகவும் அவரது வீட்டுக்கு வீரப்பன் ஒரு ஆள் மூலம்கடிதம் அனுப்பினான்.
இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட சில பொருள்களை வீரப்பனுக்குத் தந்துஅவரை மீட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. உணவு எடுத்து வந்த செல்வம் தரப்பினருக்கு வீரப்பன் நிறைய பணம்தந்ததாகவும் தெரிகிறது.
விடுதலையான செல்வம் உடனடியாக போலீசாரைத் தொடர்பு கொண்டு தான் கடத்தப்பட்டதைத் தெரிவித்தாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து அவரிடம் கர்நாடக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகஅதிரடிப்படையினரும் அங்கு வந்து செல்வத்திடம் விசாரணை நடத்தினர்.
முன்னதாக செல்வம் இன்னும் காட்டுக்குள் பிணைக் கைதியாக இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், அவர்தனது வீட்டில் தான் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
செல்வத்தை சில நாட்கள் தங்களுடன் வைத்திருந்த வீரப்பன் கும்பல் பணம் கொடுத்து சில வேலைகளை செய்துகொடுக்கச் சொல்லி மிரட்டியுள்ளது. உணவுப் பொருள்கள் கொண்டு வருமாறு கூறியுள்ளது. இதையடுத்து செல்வம்காட்டிலிருந்து வெளியே வந்து வீரப்பன் சொன்ன வேலைகளைச் செய்து தந்துவிட்டு, உணவுப் பொருள்களையும்சப்ளை செய்துவிட்டு, பின்னர் பயந்து போய் போலீசாரிடம் சென்று உண்மையை ஒப்புக் கொண்டதாகக்கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக- கர்நாடக அதிரடிப்படையினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தக் கடத்தல் செய்தியே தவறானது. அப்படி எதுவுமே நடக்கவில்லை என கர்நாடக முதல்வர்கிருஷ்ணா மறுத்துள்ளார். சித்ரதுர்கா நகரில் நிருபர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக வரும் செய்திகளில்உண்மையில்லை. தமிழக- கர்நாடக அதிரடிப் படைகள் வீரப்பனின் செயல்பாட்டை முடக்கிவிட்டன.அதிரடிப்படை மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications