கருணாநிதியிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் சிபிசிஐடிபோலீஸார் விசாரணை நடத்தினர்.
| கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொண்ட சமரசமுயற்சிகளின்போது ஏராளமான பணம் கைமாறியதாக முன்னாள் கர்நாடக போலீஸ் டிஜிபி தினகர் தான் எழுதியபுத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். கருணாநிதி வீட்டில் வைத்துத்தான் கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாக அவர்கூறியிருந்தார். |
இந் நிலையில் இந்த விசாரணை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் நேற்றுமாலை சென்றனர். இரண்டு சிபிசிஐடி அதிகாரிகள், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் அவரை சந்தித்துவிசாரணை நடத்தினர்.
அவர்கள் சென்ற பின்னர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
சிபிசிஐடி கண்காணிப்பாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணைக்காக வந்திருந்தனர். ராஜ்குமார்கடத்தலின்போது அவரை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்துக் கேட்டனர்.
ராஜ்குமார் கடத்தலின்போது தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் குறித்துத்தெரிவித்தேன். வீரப்பனால் யாராவது கடத்தப்பட்டால் இரு மாநில அரசுகளும் இணைந்து மீட்பு நடவடிக்கையில்ஈடுபடுவது வழக்கம் என்று தெரிவித்தேன்.
அதேபோல, கடந்த அதிமுக காலத்தில் வீரப்பனால் கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி சிதம்பரநாதனை மீட்கஅப்போதைய ஜெயலலிதா அரசு மேற்கொண்ட முயற்சிகள், வீரப்பனின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டுஜெயலலிதா அரசு பிறப்பித்த உத்தரவுகள் ஆகியவற்றையும் அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.
அதே போலத்தான் எனது அரசும் செயல்பட்டது என்பதை அவர்களுக்கு நினைவூட்டி அனுப்பி வைத்தேன் என்றார்கருணாநிதி.
இதற்கிடையே கருணாநிதியின் வீட்டுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வந்ததையடுத்து அவர் கைதாகப் போவதாக புரளிகிளம்பியது. இதையடுத்து ஏராளமான திமுக தொண்டர்கள் கோபாலபுரம் வீட்டு முன்பாக திரண்டிருந்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications