வனத்துறை, வணிகரி வரி செக் போஸ்டுகளில் போலீஸ் ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள வணிகவரி, போக்குவரத்து, காவல்துறை சோதனைச் சாவடிகளில் ஊழல்தடுப்புப் போலீஸார் திடீர் சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்தனர்.

செக்-போஸ்ட்டுகள் என்ற பெயரில் இயங்கி வரும் வணிகவரித்துறையின் சோதனைச் சாவடிகளில் லஞ்சம்தலைவிரித்தாடுகிறது. ஒரு லாரிக்கு ரூ. 1,000 வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒருசெக் போஸ்டில் ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் வரை கூட லஞ்சப் பணம் வசூலாகிறது.

அதே போல போலீசார் அமைக்கும் சோதனைச் சாவடிகளிலும் வாகனங்களில் சோதனை என்ற பெயரில் பணம்பறிக்கப்படுகிறது.

இந் நிலையில் தமிழக ஊழல் தடுப்புப் போலீஸார் தர்மபுரி மாவட்டம் ஓசூர் வணிக வரி சோதனைச் சாவடியில்அதிகாலை 5 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். இதில் சோதனைச் சாவடியில் வைக்கப்பட்டிருந்த, கணக்கில்வராத லட்சக்கணக்கான லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சாவடி அமைந்திருப்பது பெங்களூர் நெடுஞ்சாலை என்பதால் லஞ்ச வசூல் மிக அதிகம்.

இதேபோல, கோவை-பாலக்காடு சாலையில் உள்ள சோதனைச் சாவடியிலும் போலீஸார் திடீர் சோதனை நடத்திஏராளமான பணத்தைக் கைப்பற்றினர்.

இது தவிர மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் ஊழல் தடுப்புப் போலீஸார் சோதனை நடத்தியபோது பல லட்சம் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

கணக்கில் வராத பணத்தை (லஞ்சத்தை) இருப்பு வைத்திருந்தது தொடர்பாக ஊழியர்களிடம் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் கைதாகலாம்என்று தெரிகிறது.

அதே போல வனத்துறை செக் போஸ்டுகளிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.

குமுளி பகுதியில் லஞ்சம் வாங்கிக் கொண்டு மரங்களைக் கடத்த உதவிய வனத்துறை ரேஞ்சர் மற்றும் 3 வனத்துறைஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே மரங்களைக் கடத்திய வனத்துறை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ரூ. 2லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டிக் கடத்திக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+