மளிகை கடைகள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை விற்ற ரயில்வே ரிசர்வேஷன் ஊழியர்கள் !!!
சென்னை:
சென்னை மாம்பலம் ரயில்வே முன்பதிவு மையத்தைச் சேர்ந்த ஊழியர்கள், மளிகைக் கடைகள் மூலமாகடிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கையும், களவுமாக கண்டுபிடித்தார் ரயில்வேத்துறைஇணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி.
இதையடுத்து மாம்பலம் முன் பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைவரையும் வேறு நிலையங்களுக்குகூண்டோடு இடமாற்றம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.
தீபாவளி பண்டிகை வருவதால் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்களுக்கு கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.இந் நிலையில் முக்கிய ரயில்களின் டிக்கெட்டுகளை தாங்களே வெவ்வேறு பெயர்களில் பிளாக் செய்துவைத்துவிட்டு, அவற்றை மளிகைக் கடைக்காரர்கள் மூலமாக வெளியில் அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
வழக்கமாக பண்டிகை காலங்களில் ரயில்வே முன் பதிவு ஊழியர்கள் இதை செய்வது வழக்கம்.
மாம்பலம் நிலையத்தைப் பொறுத்தவரை டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பவர்களிடம் அருகில் வரும் மளிகைக்கடைக்காரர்கள், தங்களிடம் டிக்கெட் இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்று, கூடுதல் பணத்தை வாங்கிக் கொண்டுடிக்கெட்டுகளைப் பெற்றுத் தந்து வந்தனர்.
மளிகைக் கடைக்காரர்கள் கண் காட்டும் ஆட்களுக்கு மட்டும், முன் பதிவு கெளண்டர்களில் இருந்த ரயில்வேஊழியர்கள், டிக்கெட்டுகளைத் தந்துள்ளனர்.
ரயில்வேத்துறை இணையமைச்சராவதற்கு முன் மூர்த்தி இதே மாம்பலம் ரயில் நிலையத்தின் எதிரே தான் காய்கறிக்கடை வைத்திருந்தார். பா.ம.கவிலும் தீவிரமாக இருந்தார். அப்போதே இந்த முன் பதிவு மைய ஊழியர்கள்-மளிகைக் கடைக்காரர்கள் கூட்டணியின் மோசடியை அறிந்து வைத்திருந்தார்.
இந் நிலையில் நேற்று ரயில்வே அதிகாரிகளுடன் மாம்பலம் ரயில் நிலையம் வந்த அவர், தனது காரில் உட்கார்ந்தவண்ணம் அங்கு நடப்பதை நேரில் பார்த்துள்ளார்.
மளிகைக் கடைக்காரர் டிக்கெட் வாங்கித் தருவதும், முன் பதிவு ஊழியர்களுடன் கண் ஜாடையில் பேசுவதையும்நேரடியாகப் பார்த்த மூர்த்தி, திடீரென காரிலிருந்து இறங்கிப் போய் அந்த கடைக்காரரைப் பிடித்தார்.
அடுத்ததாக முன் பதிவு ஊழியர்களையும் கையும் களவுமாகப் பிடித்து கடுமையாக டோஸ் விட்டார்.
இது குறித்து மூர்த்தி செய்தியாளர்களை கூறுகையில்,
டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக வெளியில் எடுத்துச் சென்று, அருகில் உள்ள சில மளிகைக் கடைகள் மூலமாகஅதிக பணத்திற்கு விற்று வந்ததை நானே நேரில் பார்க்க நேர்ந்தது. இதையடுத்து சில ஊழியர்களை நானேகையும், களவுமாக பிடித்தேன்.
பிடிபட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்துமாறும், தேவைப்பட்டால் சஸ்பெண்ட் செய்யுமாறும்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாம்பலம் மையத்தில் பணியாற்றி வந்த அனைத்து ஊழியர்களையும் வேறுரயில் நிலையங்களுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளேன்.
இங்கு வேறு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருமயிலை (மயிலாப்பூர்) திருவான்மியூர் இடையிலான மாடி ரயில் திட்டம் வரும் தீபாவளிக்கு முன்பாக முடிந்து,நடைமுறைக்கு வரும் என்று உறுதியாக நிம்புகிறேன். சென்னை மக்களுக்கு சிறந்த தீபாவளிப் பரிசாக இதுஅமையும் என்றார் அதிரடி மூர்த்தி.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications