ரிவால்வர்களுடன் ஒருவர் கைது: வெங்கடேச பண்ணையாரின் கூட்டாளி என்கிறது போலீஸ்
சென்னை:
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாடார் இன முக்கியப் பிரமுகரான வெங்கடேச பண்ணையாரின் கூட்டாளிஎன்று சொல்லிக் கொணடு ஷியாம் சுந்தர் சிங் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பண்ணையாரின் எண்கெளன்டர் சாவுக்கு முன்னாள் ஆளுநர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனமும், காவல் துறையில்உள்ள மூத்த அதிகாரிகள் சிலரின் கேரளத் தொடர்புகளுமே காரணமாகக் கூறப்பட்டு வருகிறது. இந் நிலையில்,பண்ணையார் மீது புதிதாக பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டு வருவதாக நாடார் இன பிரமுகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே ஷியாம் சுந்தர் சிங் என்பவரை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே மடக்கிப் பிடிக்துகைது செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இவர் பண்ணையாரின் கூட்டாளி என்கின்றனர்.
அவரது காரில் இரு உரிமம் பெறாத ரிவால்வர்கள், ஒரு அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததாகபோலீஸ் கூறுகிறது.
திருவொற்றியூலிருந்து, திருவான்மியூருக்கு சுந்தர் சிங் சென்று கொண்டிருந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இவருக்கு பல கொலை வழக்குகளில் தொடர்புண்டு எனவும் சொல்லும் போலீசார் இவருக்குதுரை சிங், சுந்தர்சிங் என்ற மாற்றுப் பெயர்களும் உண்டு என்கின்றனர்.
சிதம்பரத்தில் மதிமுக பிரமுகர் பழனிவேல், பாளையங்கோட்டையில் வக்கீல் ஸ்டாலின் குமார், திருவான்மியூரில்ஜெர்ரி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இவர் முக்கிய குற்றவாளியாக போலீஸ் ரெக்கார்டுகளில்உள்ளார் என்கின்றனர்.
சென்னை, கரூர், பாளையங்கோட்டையில் பல்வேறு கட்டப் பஞ்சாயத்துக்களை நடத்தி வந்தவர் இவர் என்றும்போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு பெரிய ரெளடியை இத்தனை நாட்களாக விட்டுவிட்டு இப்போது பண்ணாையர் செத்த பின்னர் அவரதுகூட்டாளி என்று சொல்லி கைது செய்துள்ளது ஏன் என்று விளங்கவில்லை. போலீஸ் தான் பதில் சொல்ல வேண்டும்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications