ரயில் தடம் புரண்டதாக பரபரப்பு: ஒத்திகை நடத்தியதாக ரயில்வே அறிவிப்பு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே மின்சார பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 2 பேர் இறந்ததாகவும் 10 பேருக்கு படுகாயம்ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
இதையடுத்து தீயணைப்பு படைகளும், காவல் துறையினரும் அங்கு விரைந்தனர். ரயில்வே துறை இணையமைச்சர்ஏ.கே.மூர்த்தியும் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
பின்னர்தான் அது ஒரு ஒத்திகை என தென்னக ரயில்வே அறிவித்தது. விபத்துக்கள் நடந்தால் மீட்புப் பணிகளைஉடனடியாக மேற்கொள்ள ரயில்வே தொழிலாளர்களும், மீட்புப் படையினரும், போலீஸாரும் எந்த அளவுக்குதயார் நிலையில் உள்ளனர் என்பதை அறிய இந்த ஒத்திகை நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு சென்ற பயணிகள் ரயில் பாலூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுவிட்டதாகவும் இரு பெண்கள் பலியாகி விட்டதாகவும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகளை ரயில்வேதுறை பரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஒத்திகை மிக ரகசியமாக நடத்தப் பட்டது. ரயில்வே துணை இணையமைச்சருக்கு கூட இது பற்றிதெரிவிக்கப்படவில்லை. கொங்கன் ரயில்வே விழாவில் கலந்து கொள்வதற்காக கோவாவுக்கு சென்றுகொண்டிருந்த மூர்த்தி ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப்பட்டு தன் பயணத்தை ரத்து செய்து விட்டு சம்பவஇடத்துக்கு விரைந்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications