குமரி மீனவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கேரளம் உறுதிமொழி

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

தமிழக மீனவர்களைத் தாக்கிய கேரள மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அம் மாநில போலீசார்உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து கொச்சி துறைமுகத்தை முற்றுகையிட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தமிழக மீனவர்களை நடுக்கடலில் கேரள மீனவர்கள் தாக்கியதையடுத்து 100 படகுகளில் கொச்சி துறைகம் சென்ற2,000 தமிழக மீனவர்கள் அதை முற்றுகையிட்டு கப்பல், படகு போக்குவரத்தையே நேற்று ஸ்தம்பிக்கவைத்துவிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், நத்திரவிளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் காலம் காலமாக கொச்சிகடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக இங்கு மீன் பிடிக்கக் கூடாது என்று சொல்லிதமிழக மீனவர்களை கொச்சி மீனவர்கள், தாக்கி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் குமரி மாவட்ட மீனவர்களை அரபிக் கடலில் பயங்கரமாக தாக்கிய கேரள மீனவர்கள்,தமிழக மீனவர்களின் 9 விசைப் படகுகளையும் தீ வைத்து எரித்தனர்.

கேரள மீனவர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிலிருந்து 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிர் தப்பிவந்துள்ளனர். ஆனால், பல மீனவர்களைக் காணவில்லை. அவர்களின் கதி என்னவானது என்று தெரியவில்லை.

மீனவர்கள் தாக்கப்பட்ட செய்தி தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் 100 விசைப் படகுகளில் கொச்சிதுறைகத்திற்கு விரைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் துறைமுகத்தை முற்றுதையிட்டுபோராட்டம் நடத்தினர். தமிழக மீனவர்களின் படையெடுப்பால் கொச்சி துறைகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் படகுப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. சில கப்பல்களையும் மீனவர்கள் தடுத்தனர்.இதையடுத்து எர்ணாகுளம் மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாகள் விரைந்து வந்து தமிழக மீனவர்களுடன்சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தனர்.

எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஞான சுகுமார், பல்வேறு மீனவர்கள் அமைப்புகளின் கூட்டத்திற்குஏற்பாடு செய்தார். இதில் தமிழக மீனவர்கள் சார்பில் சர்ச்சில் என்ற பாதிரியார் உள்பட 2 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்,தமிழகத்திலிருந்து குமரி மாவட்ட எல்லை வழியாக ஒரு லாரி கூட கேரளாவிற்குள் செல்ல முடியாதபடி மாபெரும்போராட்டம் நடத்துவோம் என்று பாதிரியார் சர்ச்சில் எச்சரித்தார்.

தென் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் உணவுப் பொருள்கள், காய்கறிகளை ஏற்றிச் செல்லும்அனைத்து லாரிகளையும் தடுத்து நிறுத்திவிடுவோம் என்றார். (கேரளாவின் உணவுத் தேவையில் பெரும் பகுதியைபூர்த்தி செய்வது தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது).

இதைத் தொடர்ந்து இனிமேல் சட்டம், ஒழுங்கு சீர் கெடாமல் நடந்து கொள்வதாகவும் தமிழக மீனவர்களைத் தடுக்கமாட்டோம் என்றும் கேரள மீனவர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மோதலுக்குக் காரணமாக இருந்த கேரள மீனவர்களின் பெயர்ப் பட்டியலை தமிழக மீனவர்கள்எர்ணாகுளம் ஆட்சித் தலைவரிடம் அளித்தனர். அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக அவர்உறுதியளித்தார்.

இதையடுத்து கொச்சி துறைமுக முற்றுகையை தமிழக மீனவர்கள் வாபஸ் பெற்றனர்.

மீனவர்கள் மோதல் காரணமாக தமிழக, கேரள எல்லைப் பகுதியில் இன்றும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+