தஞ்சையில் இடிதாக்கி 5 பேர் பலி
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூரில் இடி தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர்.பள்ளி மைதானத்திலும் இடி விழுந்தது. 1000 மாணவ மாணவியர் தப்பினர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில்,தஞ்சை திருவாரூரில் நேற்று முன்தினமும் சுமார் 3 மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தஞ்சை மாவட்டம் குடந்தை அருகிலுள்ள இன்னம்பூரைச் சேர்ந்த சம்பத்தத்தின் மனைவி மாலதி. இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.மாலதி நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்த இடி மாலதியைத் தாக்கியதில் அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார்.
இதேபோல் தஞ்சை ஒரத்தநாடு அருகே பூவத்தூரைச் சேர்ந்த லலிதா, லட்சுமி, சரோஜா மற்றும் சிலரையும் நேற்றுஇடி தாக்கியது. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லலிதா இறந்தார். லட்சுமியும் சரோஜாவும் அதிர்ச்சியில்மயக்கமடைந்தனர்.
மேலும் அங்கு இடியால் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டுள்ளனர். அங்கு சிகிச்சைபலனளிக்காமல் கோவிந்தராஜ் என்பவர் இறந்தார். மேலும் பொட்டலங்குடிகாட்டை சேர்ந்த வில்லுச்சாமியும் புல்அறுத்துக் கொண்டிருக்கும் போது இடி தாக்கி இறந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூரை சேர்ந்த ராஜா மற்றும் 7 பேர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது விழுந்த இடியில் ராஜா கருகி இறந்தார். மற்ற 7 பேரும் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கணபதி அக்ரஹாரம் , கபிஸ்தலம் போன்றஊர்களிலும் நல்ல மழை பெய்தது. அப்போது பயங்கரமாக இடி இடித்தது. அந்த இடி பாபநாசம் ஒன்றியநடுநிலைப்பள்ளியிலுள்ள தூங்குமூஞ்சி மரத்தைத் தாக்கி மரம் கருகி விட்டது.
இடி பள்ளி வகுப்பறைகளிலிருந்து 15 கி.மீ. தொலைவில் விழுந்ததால் அங்கு படிக்கும் 1000 மாணவ மாணவியர்உயிர் தப்பினர். மாணவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரம் ஆனது.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications