நாடார் சமூக மக்களின் அதிருப்திக்கு மத்தியில் இன்று ஜெ. விருதுநகர் பயணம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 235 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க முதல்வர்ஜெயலலிதா இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றார்.
இன்று பிற்பகல் விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற அவர், மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம்ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.
வெங்கடேச பண்ணையாரின் எண்கெளன்டர் சாவினால் கடுப்பில் உள்ள நாடார் சமூக மக்கள்பெரும்பான்மையாக வசிக்கும் இந்த மாவட்டத்துக்கு, இந்த நேரத்தில் ஜெயலலிதா செல்வது மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது.
அவருக்கு கருப்புக் கொடி காட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் சில நாடார் அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன. இதைத்தடுக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்- கிருஷ்ணன்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட போலீஸ் துப்பாக்கிச் சுடும்மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை வகிக்கிறார்.
திமுக எம்.எல்.ஏவும், ஜெயலலிதாவின் பரம எதிரியுமான தாமரைக்கனியில் சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்குமுதல்வருக்கு எதிராக ஏதாவது போராட்டம் நடந்தால் தனது தலையைைத் தான் உருட்டுவார்கள் என்று பயந்துபோய் தாமரைக்கனி ஊரை விட்டே வேறு எங்கோ சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
அவரது மகனும் அமைச்சருமான இன்பத் தமிழன் தான், விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்துவருகிறார்.
சமீபத்தில் நாடார் சமுதாய பிரமுகர்களை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்தியதும், வெங்கடேசபண்ணையார் சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டதும் இந்த விருதுநகர் பயணத்தை முன்னிட்டு தான்என்கிறார்கள்.
கடந்த வாரம் நாகப்பட்டிணத்தில் நடந்த இதே போன்ற வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் காங்கிரஸ் எம்.பிமணிசங்கர அய்யருக்கும் ஜெயலலிதாவுக்கும் மேதல் ஏற்பட்டு அய்யர் அதிமுகவினரால் தாக்கப்பட்டார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications