தலைவர் பதவி: காங்கிரசில் மீண்டும் சண்டை ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவராக வாசன் பொறுப்பேற்க வேண்டும் என்று தற்போதைய தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கோரிக்கை விடுத்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்க செயல் தலைவர் இளங்கோவன மறுத்துவிட்டார்.

முன்பு வாசனின் ஜால்ராவாக இருந்தவர் சோ.பா. அவரை வாசன் தான் தலைவராக்கினார். தலைவரானது முதல்செயல் தலைவர் இளங்கோவனுடன் மோதினார்.

இதையடுத்து சோ.பாவுக்கு டெல்லி மேலிடம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து இளங்கோவனுடன்ராசியான சோ.பா. அடக்கி வாசித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாசன் கோஷ்டி டெல்லிக்குச் சென்றுசோ.பாவை நீக்கக் கோரி வந்தது.

இதுவரை டெல்லியில் இருந்து வாசன் தரப்புக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இந் நிலையில் சோ.பாவை ஒதுக்கியேவைத்துள்ள சோனியா காந்தி, இளங்கோவனக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் சென்னை வந்த சோனியா, விமானம் ஏறும் முன் இளங்கேவானை மட்டும் தனியே அழைத்து 5நிமிடங்கள் பேசினார். சோ.பாவைக் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து மீண்டும் தனது பழைய பாணிக்கேதிரும்பியுள்ள சோ.பா, வாசனைத் தீவிரமாக ஆதரிக்க ஆரம்பித்துள்ளார். மேலும் வாசனே தலைவராக வேண்டும்என்று கோரியுள்ளார்.

இதனால் இளங்கோவன் கோஷ்டி கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளது.

வாழப்பாடியாருக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய சோ.பா, தமிழக காங்கிரசுக்கு வாசன் தான் தலைவர். சிலர்அவரை தனித் தலைவராகப் பார்க்கிறார்கள். நானும் இளங்கோவனும் வாசனைத் தலைவராக ஏற்கத் தயாராகஇருக்கிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என்ற முள் படுக்கையில் பீஷ்மர் போல் படுத்துக் கிடக்கிறேன். இதில் இருந்துஎன்னை வாசன் தான் காக்க வேண்டும் என்றார்.

இதை கடுகடுத்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் இளங்கோவன்.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய சோ.பா., பலரும் வாசனே தலைவராக வேண்டும் என்று கூறினார்கள்.அதைத் தான் நானும் கோருகிறேன். எனது கருத்தை இளங்கோவனிடம் தெரிவித்தேன். அவரும் மிகவும் மகிழ்ச்சிதெரிவித்தார்(!). வாசனை எதிர்ப்பதாக இருந்தால் இளங்கோவன் தான் எதிர்க்க வேண்டும். அவர் எதிர்க்கவில்லைஎன்றார்.

சோ.பாவின் இந்தப் பேச்சு குறித்து இளங்கோவனிடம் கேட்டபோது, சோ.பா. பேசியதற்கு நான் எப்படி பதில்சொல்ல முடியும். இந்த விவகாரத்துக்கு பதில் சொல்லவே நான் விரும்பவில்லை என்றார்.

சோ.பாவை வாசன் கோஷ்டி மீண்டும் வளைத்துவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் மீண்டும் காங்கிரசில் புதியகச்சேரி ஆரம்பிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+