உண்மையை கூற ஜனனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கஞ்சா கடத்தல் மற்றும் கணக்கின்றி பணம் வைத்திருத்தல் ஆகிய வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளஜனனி, தனக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்பது பற்றி உண்மைகளைக் கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
ஜனனிக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும் தொடர்பு இருப்பதாகவும், நடராஜன் தான் ஜனனிக்கு பல கோடிபணத்தையும் நகைகளையும் தந்ததாகவும் பேசப்பட்டு வருகிறது. ஜனனி- நடராஜன் உறவை விரும்பாத சசிகலாதான் போலீசை அனுப்பி பணம், நகைகளைக் கைப்பற்றியதோடு, ஜனனி மீது கஞ்சா கேஸ் போட வைத்ததாகபேசப்படுகிறது.
இந் நிலையில் பணம் வந்த விதம் குறித்து ஜனனி விளக்கம் தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அப்போது ஜனனியை 9ம் தேதியே போலீசார் கைது செய்துவிட்டதாகவும், அதன் பின்னர் 36 மணி நேரம் கழித்துத்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் கபில் சிபல் கூறினார். இது உச்ச நீதிமனற விதிமுறைகளுக்கு எதிரானதுஎன்று சுட்டிக் காட்டிய அவர், இது தொடர்பாக ஒரு பேக்ஸையும் ஆதாரமாகக் காட்டினார்.
கந்தசாமி என்பவரின் பெயரில் 9ம் தேதி கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த பேக்சில், ஜனனியை போலீசார்கைது செய்துள்ளதாகவும் அவரது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
10ம் தேதி தான் கைது செய்தோம் என்று போலீசார், நீதிமன்றத்தில் கூறி வரும் நிலையில் இந்த பேக்ஸை வைத்துவழக்கை உடைக்க கபில் சிபல் முயன்று வருகிறார். மேலும் ஜனனியின் காரில் இருந்ததாகக் கூறப்படும் கஞ்சாவின்அளவு குறித்தும் போலீசார் முன்னுக்குப் பின் முரணாக வழக்குப் பதிவு செய்துள்ளதையும் சுட்டிக் காட்டி அரசுத்தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று தொடர்ந்து நடந்தது. அப்போது ஜனனியின் வழக்கறிஞரிடம் நீதிபதிகற்பகவிநாயகம் சில கேள்விகளைத் தொடுத்தார்.
வீட்டில் கஞ்சா வைத்திருந்தாக போலீஸ் கூறுகிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் ரூ. 1.40 கோடி பணம்குறித்து நீங்கள் (ஜனனி தரப்பு) எதுவும் கூறவில்லை. அந்தப் பணம் எப்படி வந்தது? யார் கொடுத்தது? எதற்காககொடுத்தார்கள்?
இந்த விஷயத்தில் நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது கோர்ட் சந்தேகப்படநேரிடும். கஞ்சா விற்று இந்தப் பணம் சேர்க்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறுகிறது. எனவே பணம் வந்த விதம்குறித்து நீங்கள் (ஜனனி தரப்பு) தெளிவாக விளக்க வேண்டும்.
கந்தசாமி என்பவர் யார்? உங்களைக் கைது செய்து விட்டதாகவும், காப்பாற்றும்படியும் காவல்துறைக்கும்,ஆளுனருக்கும் அவர் தந்தி அனுப்பியுள்ளார். அவருக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? தந்தி அனுப்புமாறுஅவரைத் தூண்டியது யார்?.
இந்தக் கேள்விகளுக்கு வரும் 31ம் தேதிக்குள் உங்களது மூத்த வழக்கறிஞர் (கபில்சிபல்) பதில் அளிக்க வேண்டும்என்றார் நீதிபதி கற்பகவிநாயகம். இன்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
கந்தசாமி என்ற பெயரில் நடராஜன் தான் கவர்னருக்கு பேக்ஸ் அனுப்பியதாகவும் ஒரு சந்தேகம் உள்ளது.
ஜனனியைக் கைது செய்தபோது நடராஜனும் உடன் இருந்ததாகவும், அவரை விரட்டிய பின்னரே ஜனனி கைதுசெய்யப்பட்டதாகவும் ஆரம்பத்தில் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கைது செய்யப்பட்ட கையோடு சென்னை நீலாங்கரையில் ஜனனிக்கு நடராஜன் வாங்கித் தந்த பங்களாவில்சோதனை நடத்திய போலீசார் பல கோடி ரூபாய்களைக் கைப்பற்றியதாகவும், பின்னர் அதில் ரூ. 1.4 கோடியைமட்டும் கைப்பற்றியதாகக் கணக்கில் காட்டியதாகவும் தகவல்கள் வந்தன.
இப்போது இந்தப் பணம் எப்படி வந்தது என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளதால், வழக்கில் ஜனனிக்காகபின்னணியில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கருதப்படும் நடராஜன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நடராஜன் தான் தந்தார் என்று ஜனனி தரப்பில் சொல்லப்பட்டால், நடராஜன் அண்ட் கோவுக்கு எப்படி கோடிகள்வந்த என்ற கேள்வியை எதிர்க் கட்சிகள் எழுப்பும். அப்போது இந்த வழக்குக்கே காரணமாக உள்ளதாகக்கூறப்படும் சசிகலாவுக்கும் சிக்கல் வரலாம்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்










Click it and Unblock the Notifications