பண்ணையார் வழக்கு: தலைமறைவான ஆடிட்டர் சரணடைய நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெங்கடேச பண்ணையார் என்கெண்டர் வழக்கில் தலைமறைவாக உள்ள ஆடிட்டர் ஜெய் கணேஷ் என்பவர்உடனடியாக போலீஸில் சரணடைய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளவைச் சேர்ந்த சிலரால் நடத்தப்பட்டு வரும் லீடர் கேபிடல் சர்வீஸஸ் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்துதனக்கு வர வேண்டிய ரூ. 1.36 கோடி பணத்தை வசூலிப்பதற்கு வெங்கடேச பண்ணையான் உதவியைநாடியுள்ளார் ஜெய் கணேஷ்.

இதையடுத்து பண்ணையார், அவரது நண்பர் பெப்சி முரளி மற்றும் ஜெய் கணேஷ் ஆகியோர் லீடர் கேபிடல்நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டுள்ளனர்.

இதன் பின்னர் தான் அந்த நிறுவன மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டிப் பணம் பறித்ததாக பண்ணையார் மீதுபோலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்குச் சென்றபோது தான்போலீஸாரால் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் பெப்சி முரளியை போலீஸார் ஏற்கனவே கைது செய்து விட்டனர். ஜெய் கணேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ஜெய்கணேஷ் மனு செய்தார். மனுவை விசாரித்தநீதிபதி கற்பகவிநாயகம்,

பண்ணையார், பெப்சி முரளியின் உதவியை ஜெய் கணேஷ் கோரியது ஆவணங்கள் மூலம் தெளிவாகத்தெரிகிறது. சட்டத்தைத் தங்களது கையில் எடுத்துக் கொண்டு மூன்று பேரும் செயல்பட்டுள்ளனர். சட்டத்தைஅமல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை அவமதித்துள்ளனர்.

இந்த முக்கியமான வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால், இந்தச் சூழ்நிலையில் ஜெய் கணேஷுக்குமுன் ஜாமீன் வழங்க இயலாது. அவர் உடனடியாக காவல்துறையிடம் அல்லது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்சரணடைய வேண்டும்.

இல்லாவிட்டால் சென்னை மாநகர காவல்துறை ஆணையர், ஜெய் கணேஷை கைது செய்து இந்த கோர்ட்டில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி கற்பகவிநாயகம், ஜெய் கணேஷின்மனுவைத் தள்ளுபடி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+